பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87 அவர்களை 'நம்மவர்' களாக்கிக் கொள்ளும்திறமை நமக்கெல் லாம் வளரவேண்டும்!! அவர்கள் எப்போதுமே எதிர் முகாமி லேயே இருந்து தீருவார்கள் என்று எண்ணி, அவர்களைக் கண்டதும் முகத்தைச் சுளித்துக் கொள்வதும், அவர்கள் உருட்டு விழி காட்டினால் நாமும் அது போலாவதும் கூடாது. நாளாகவாக அவர்களுக்கு, காங்கிரஸ் இன்று யாருடைய கூடாரமாகி வருகிறது என்பது புரியத்தானே போகிறது! உழைக்க ஒரு கூட்டம், அரசியல் உல்லாச வாழ்வு நடாத்த வேறோர் கூட்டமல்லவா வந்துவிட்டது! தடியடியும் சிறை வாசமும், முத்து ராமலிங்கத் தேவருக்கு! மந்திரிப் பதவியும் அதனால் கிடைக்கும் மதிப்பும், ராமநாதபுரம் ராஜாவுக்கு அதாவது ராஜாவாக இருந்தவருக்கு!! பட்டேல் வருகிறார். பணப்பை ஜாக்கிரதை!! என்று லட்சக்கணக்கில் எச்சரிக்கை நோடீஸ், அபாய அறிவிப்புத்தாட்களை அச்சிட்டு வழங்கிய வட்டி வேந்தர்கள், காங்கிரஸ் வட்டாரத்திலே இன்று வட்ட மிடுகிறார்கள். உண்மை ஊழியம் செய்து, காங்கிரசை ஊராளும் கட்சியாக மாற்றி அமைத்த காங்கிரஸ்காரர்களுக்கு இந்தக் காட்சி, பெருமையும் பூரிப்புமா தரும் என்று எண்ணு கிறாய்! அவர்களும் மனிதர்கள் தானே, தம்பி! மனம் படாத பாடு படத்தான் செய்யும். செட்டிநாட்டு அரசர் இன்று காங்கிரசுக்கு ஒரு செல்லப் பிள்ளையாக இருக்கிறார்! இது காங்கிரசின் வளர்ச்சியையா காட்டும்!! தியாகத் தழும்பேற்ற காங்கிரசார்களைப் பார்த்து, கேலி பேசும் கண்களல்லவா, செட்டி நாட்டரசருக்கு இருந் திடக் காண்கிறோம் ! ஆளுங்கட்சிக்கு எந்நாளும் ஆதரவாளர் நாங்கள் - முன்பு வெள்ளையன் ஆண்டு வந்தான், வெண் சாமரம் வீசி நின்றோம். இடையே தமிழார்வம்ஓங்கி நின்றது. ஆட்சி தமிழரிடம் வந்து சேரும்போல் தோன்றிற்று, உடனே அவர்களோடு குலவினோம். செங்கோட்டையில் காங்கிரஸ் கொடி ஏறிற்று, உடனே எங்கள் கோட்டையிலும் மூவர்ணக் கொடி ஏற்றிவிட்டோம் - எப்போதும் ஆளவந்தாரின் ஆதர வாளர் நாங்கள் என்று தானே செட்டி நாட்டரசரின் புன்னகை பேசுகிறது. இது காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியாதா! கொடியைக் கரத்தில் ஏந்திக்கொண்டு, தமிழர் வாழ்க! இந்தி ஒழிக!என்று முழக்கமிட்டுக் கொண்டு ப்யூக்கும் செவர் லேயும் இருக்க, தங்கசாலைத் தெருவிலிருந்து, கடற்கரைவரை யில் நடந்து வந்தார், இன்றைய செட்டி நாட்டரசர், அன்று குமாரராஜா, நாமாவது அவரை ஓரளவுக்கு வேலை வாங்கி னோம்- மணிமாடத்துக்குச் சொந்தக்காரர் அவர், எனினும் மணல்மேடுகளுக்கு இழுத்து வந்தோம்! வியர்வை அரும்புமோ