பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90 ஒரு தீர்மானம் போட்டாக வேண்டிய நிலைமை பிறந்திருக் கிறது.-- சாதரணமெனறா இதற்குப் பொருள்! குற்றாலத்துத் தீர்மானம்,கண்களை இறுகமூடிக்கொண்டு, காதுகளையும் அடைத்துக் கொண்டு இருப்பதுபோலக் காணப் பட்டு வந்த காங்கிரஸ் நண்பர்கள், உண்மையில், நாம் கூறி வந்ததை மிகக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்திருக் கிறார்கள் என்பதையும், நம்மைக் கண்டித்துப் பேசியவர்கள், அதேபோது உள்ளூர் வடநாட்டு வஞ்சனையைக் கண்டித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும் தானே, காட்டு கிறது. இல்லையானால், இப்படி, ஒரு தீர்மானம் தீட்டவேண் டிய அவசியமும் அவசரமும் என்ன வந்தது? தென்னாடு புறக்கணிக்கப்படுகிறது என்ற உண்மை உள்ளத்தை உறுத்துவதாலேதான், இரண்டாவது திட்டத்திலாவது நியாயம் கிடைக்கச் செய்யுங்கள் என்று கேட்கவேண்டி வந்தது இல்லையானால் வீரதீரமாக, வடநாடு தென்னாட்டுக்கு ஐந்தாண்டுத்திட்டத்தில் துரோகம் செய்தது என்று கூறுவது தேசத்துரோகம்-என்று கனல் கக்கிடும், தீர்மானம் நிறை வேற்றிவிட்டல்லவா மறு காரியம் பார்த்திருப்பார்கள். தம்பி! நம்மைவிட அடிக்கடி, வடநாடு போய் வருகிற வர்கள்தானே, காங்கிரஸ் தலைவர்கள்! அங்கே பொங்கிடும் வளமும், அதன் பயனாக ஓங்கிடும் கர்வமும் அவர்கள் காணா மலா இருக்கிறார்கள் கண்டு வெட்கமும் வேதனையும் கொண்டு, பிறகு, கட்சி கட்டு திட்டம் இவைகளை எண்ணி விம்முகிறார்கள்! வீறுகொண்டெழும் காலம் வெகு தொலைவில் என்று கருதாதே-விரைவிலே வரக்கூடும். நீயும் நானும், அவர்களுடைய இதயத்தைத் தொடும் வகையில், விஷய விளக்கம் தரவேண்டும். எங்களுக்கும் தெரியும்--என்று ஆரம்பத்தில் ஆதீன கர்த்தா பாணியில் பேசுவர். எங்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கிறது - என்று அன் பாகப் பிறகு கூறுவார். எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதற்காவன செய் வோம் - என்று உறுதி அளிக்க முன்வருவார்கள் அடுத்த கட்டத்தில். நாம் ஒன்றுபட்டுக் கேட்டால்தான், வடநாடு வழிக்கு வரும்! கொஞ்சியது போதும்-இனி கிளர்ச்சிதான்! மயிலே மயிலே இறகு போடென்றால் போடுமா! பிரிட்டிஷ் ஏகாதிபத்யத்தையே ஒருகை பார்த்தோம்; இந்த மார்வாடி ஏகாபதித்யத்தை வீழ்த்துவதா முடியாத காரியம்!