பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

95 கூலி போதவில்லை, கும்பி நிரம்பவில்லை, கொட்டும் குளி ரைத் தாங்கிக் கொள்ளச் சக்தி இல்லை, கொடுக்கும் கசையடி யால் பீறிட்டு வரும் குருதியைத் துடைக்கவும் நேரமில்லை, வேலையில் நிம்மதியுமில்லை, அது நிலைத்து இருக்கும் என்பதற் கும் உறுதி இல்லை,-இவைகளல்ல, பவனபுரியினருக்குள்ள பிரச்னைகள். இந்தப் பிரச்சினைகளெல்லாம் நம்மவர்களுக்கு நாடாண்ட இனம் என்று கூறுகிறோமே, அந்தத் திராவிட மக்களுக்கு - வெளிநாடுகளிலே வாழ்பவர்களுக்கு அல்ல- வதைபடுவர்களுக்கு! பவனம் அமைகிறது, அவர்களுக்கு படகு அழைக்கிறது, நம்மவர்களை! பல்வேறு நாடுகளிலே பரங்கியர் போலாகி விட்டுள்ளனர், அவர்கள். சென்ற இடமெங்கும் வறுமைச் செந்தேள் கொட்டுகிறது, திராவிடரை. தேயிலைத் தோட்டம் அமைக்கிறார்கள், மோட்டார் பஸ்கள் நடத்துகிறார்கள், பல சரக்குக் கிடங்குகள் அமைக் கிறார்கள், அவர்கள். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து, அட்டைக்கடி அரணைக்கடி பெற்று, ஆவி பிரியாதது ஒன்றுதான் பாக்கி என்று கூறத்தக்க அவல நிலையில் இருக்கிறார்கள், திராவிடர்! ராஜாங்கத்திலே நாங்கள் ஏன் நடு நாயகர்களாக்கப் படக் கூடாது? என்று கேட்டு, புருவத்தை நெரித்துக் காட்டு கிறார்கள், அவர்கள். ரப்பர் பாலை எடுத்துவிட்டு, இராத்தூக்கமின்றி, கைகளைப் பிசைந்தும், கண்களைக் கசக்கிககொண்டும், கலங்கி நிற்கிறார்+ள், திராவிட மக்கள். அவர்கள் எதிர் காலத்தை மேலும் எழிலுள்ளதாகவும் நிலையை ஏற்றமுள்ளதாகவும் செய்ய, பவனம்! நம்மவர்களுக்கு, இந்த ஒரு வேளைக் கஞ்சியும் ஏன் தரவேண்டும் என்று சிங்களம் பேசிக்கொண்டு, சிங்கக் கொடிசர்க்கார் படகுகளைக் காட்டுகிறது, ஏறிச்செல் - எங்கள் நாட்டிலே இடமில்லை, போ, போ! என்று, இவர்களுக்கு, ஒரு குடில் இல்லை இங்கு அவர்களுக்காக அக்கறை காட்டும் அன்பர் குழாம், ஆற டுக்கு மாடி கட்டுகிறது - ஆனந்தத்துடன் சிந்து பாடுகிறது! ஏன்? அவர்கள், ஆளும் இனத்தினர்! திராவிடர், அடிமை இனத்தவராக்கப்பட்டுவிட்டனர்?