பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

96 வேங்கைக் காட்டிலேதான் நரி ஆட்சி நடக்கிறதே- நரிக்குத்தானே பிறகு, எல்லா வைபவமும் கிடைக்கமுடியும். திராவிடர்கள் இலங்கையில், பர்மாவில், மலாய் நாட் டில், எங்கும் இன்று இடர்ப்பட்டு, இழிமொழிகளைத் தாங்கிக் கொண்டு உள்ளனர். அவர்களின் வாழ்வு துலங்க, வகை என்ன, வழி என்ன என்பதற்கு, ஓர் அறிவியற்கூடம் இல்லை, ஆற்றல் அரங்கு காணோம். அங்கே ஆறடுக்கு மாடி அமைத்து அந்தப் பவனத்தில் ஆராய்ச்சி நடத்தப்போகிறார்கள், ஏன் சென்றனர்? எப்படிச் சென்றனர்? சென்று எவ்வகையில் அங்கு வாழ்வு பெற்றனர்? என்பன பற்றி! துரத்தி அடிக் கிறதே இலங்கை சர்க்கார், அந்தத் துயரக் கடலில் மூழ்கித் தவிக்கும் திராவிட மக்களுக்கு, மீட்சிக்கு மார்க்கமுண்டா, என்று கேட்க நாதியில்லை, கவனிக்க நேரமில்லை. கண் இருக் கிறது, கருத்தும் இருக்கிறது, ஆனால் இந்தப் பிரச்சினையைக் கவனிக்க அல்ல. இலங்கை சர்க்கார், திராவிட மக்களைத் தேளெனக் கொட்டி, அம்மக்கள் தேம்பித்தவித்துக் கொண்டிருந்தபோது, விஜயலட்சுமி பண்டிட் அங்கு பவனி சென்றதும், அதுபோது ஆசியாவின் ஜோதியின் குடும்பக் குமரிகள், குதூகல விருந் திலே கலந்து கொண்டது மட்டுமல்ல, கொத்தலாவலையுடன் மேனாட்டு முறையில் நடனமாடி ரசித்ததும் தம்பி, நாடு கண்ட காட்சி! கண்ணீர் பொழிகிறான், காவிரிக் கரைக்காரன்; பன்னீரில் குளித்தெழுந்து, பரிமள கந்தம் பூசி, பட்டுப் பட்டாடை அணிந்துகொண்டு, பரங்கியர் முறையிலே 'பால் டான்சு' ஆடினர், பண்டிதரின் இல்லத்துச் செல்வக் குமாரி கள் - படாடோபம் கூடாது- ஆர்ப்பாட்டம் ஆகாதுட செல்வச் செருக்கு கூடாது-ஏழை மக்கள் புழுப் போலத் துடிக்கும் போது பணக்காரர்கள் பகட்டாக வாழ்ந்து காட்டு வது வெந்த புண்ணிலே வேல் சொருகுவதாகும் என்று மற்ற வர்களுக்கு உபதேசம் செய்யும் பண்டிதர், இந்த அக்ரமத் தைக் கண்டித்தாரில்லை. பிரான்சுப் புரட்சி வெடிக்கு முன்பு இது போல நடை பெற்ற துண்டு - மாளிகையிலே மதுக் குடம் உருளும், இடை நெளியும், கடைசிவக்கும், கனவான்கள் ககைப் பந்துகளைப் பெறுவர், காரிகையர் கோலமயில் போலாடுவர், குயிலெனக் கூவுவர், சாகசச் சமரில் யாருக்கு யார் தோற்பது என்பதறிய முடியாதது பிரச்னையாகும், இந்த அநீதியைத் தடுத்திட காய்கதிர்ச் செல்வனே! நீ யாவது முயன்று பார் என்று கூறிவிட்டு, நிலவு மங்கை மறைவாள். கோழி கூவும், கோகிலங் களின் குறட்டை கேட்டு அஞ்சும் - அதே நாட்டில், வயலில் செந்நீரும் கண்ணீரும் சேறாகும்; கருவுற்ற காரிகையின் கதற