பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99 கங்கைகொண்டான், இமயத்தில் கொடி பொறித்தான். ஈழம் சென்றான், கடாரம் வென்றான், சாவகம் சென்றான், யவனம் கண்டான் என்றெல்லாம் ஆராய்ச்சி அறைகிறது- உண்மையிலேயே, நமது இதயத்திலே அறைவது போலத் தான் இருக்கிறது, ஆராய்ச்சியாளர் கூறும் போது. இன்றோ! பம்பாயில் பவனம் கட்டுகிறார்கள்,பதினாறு இலட்சம் செலவிடு கிறார்கள் - பாண்டியன் பரம்பரை என்ற பட்டயம் பெற் றுள்ள திராவிடர்கள் (கள்ளத் தோணிகள்' என்று நிந்திக்கப் படுகிறார்கள். தொழிலெல்லாம் அங்கே, துரைத்தனம் அங்கே என்று ஆகிவிட்ட போது, ஒரு பவனம் தானா கட்ட முடியும்! வடநாடு, தென்னாடு என்று பேதம் பேசாதே, பவனம் பம்பாயில் இருந்தால் என்ன, அதற்குச் சாக்கடை சுத்தம் செய்யும் மேஸ்திரி யார் தெரியுமா? நான் தான்; தெரிந்து கொள் - என்று நம்மை மிரட்டுகிறார் அழகேசனார். அவர் களின் கருத்திலே, இலங்கைத் திராவிடர் பிரச்சினை என்று ஒன்று இருப்பதாகக்கூடத் தெரிவதில்லை-பிரன்சுப் பிரபுக் களிடம் பிலலைச் சேவகம் பார்த்துப் பிழைத்து வந்தவர்கள், பிரபு போதை மிகுதியால் மயங்கிக் கிடக்கும் நேரத்தில், கோப்பையில் மிச்சமாக இருந்த பானத்தைப் பருகிவிட்டு, நானும் இப்போது பிரபுதான என்று குளறுவராம். கேளுங் கள் கோவைக் கோமானை, விருதுநகர் அண்ணலை, சோப்புச் சீமானை, தண்ணீரில்லாத ஆறுக்கு இரும்பே சேராத பாலம் கட்டிப் பரவசப்படும் ஓமலூர் கன வானை - செச்சே! தொழில் எங்கே வளர்ந்தால் என்ன, எல்லாம் இந்தியாவில்தானே- என்று சமரசம் பேசுகிறார்கள் - அதற்காகச் சம்பளமும் தரு கிறார்கள்! ரகுபதி ராகவ ராஜாராம்- பதீத பாவன சீதாராம் கியாகர்ணா பகவான்- வைஷ்ணவ ஜனதோ இப்படிப் பஜனைப் பாடுகிறார்கள் ; பகவத் நாமத்தைக் கூறுகிறார்கள் பாலகர்கள். பாபா! மாராஜ்! பாய்யோ! சேட்ஜீ! நமஸ்த்தே; நமஸ்த்தே! என்று கூவிப் பிச்சை எடுக்கிறார்கள். உத்தரப் பிரதேசம், அசாம், பீகார், மேற்குவங்கம் இங் கிருந்தெல்லாம், சிறார்களை ஒரு கயவாளிக் கூட்டம் ஏய்த்து அழைத்துக் கொண்டு போகிறதாம். உங்களுக்கு நல்ல சாப் பாடு ; நல்ல துணிமணி, படிப்பு சொல்லித் தருகிறோம் எங்க ளோடு வந்து விடுங்கள் என்று ஆசை வார்த்தை சொல்லி