பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

தமது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் கூறிவிட்டு, அங்கு உள்ள முறைப்படி ஒரு ரட்சையை—நோன்புக் கயிறு—அவருடைய கரத்தில் கட்டினார்கள்,

மரியாதை செலுத்தவும் அன்பு தெரிவிக்கவும் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சியை, தாய்மார்கள் மெத்த அறிவுக் கூர்மையுடன், இன்று நாட்டின் நாயகர் எதனை மேற்கொள்ள வேண்டும் உடனடியாக என்பதனைச் சுட்டிக்காட்டிட ஒரு நல்வாய்ப்பாக்கிக் கொண்டு, “அண்ணா! இந்தத் திருநாளில் எமக்கொரு பரிசு தர வேண்டும்” என்று கேட்டனராம்; “என்ன வேண்டுமம்மா?” என்று கேட்ட லால்பகதூரிடம் அந்தத் தாய்மார்கள், எமது குடும்பங்களுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் வசதிகளைச் செவ்வனே செய்து கொடுக்க, உணவு, உடை, கல்வி ஆகியவற்றைப் பெற்று வாழ்வினை நடாத்த, தாங்கள் உடனடியாக ஒன்று செய்ய வேண்டும்; என்னவெனில்,

பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கள்ளச் சந்தையை ஒடுக்கவேண்டும்.
கலப்படத்தைப் போக்க வேண்டும்

என்று கூறினராம்!

குற்றுயிராகக் கிடக்கும் கணவன் பிழைத்தெழ வேண்டும் என்பதற்காக, கசியும் கண்களுடன் மருத்துவரின் தாள் தொட்டுக் கும்பிட்டபடிக் கேட்பதுண்டல்லவா, “எனக்கு மாங்கல்யப் பிச்சை தாருங்கள்” என்று, அது போலவும், பெற்றெடுத்த குழந்தைக்குப் பேராபத்து ஏற்பட்டது கண்டு, மருத்துவரிடம் சென்று, “என் குலவிளக்கு அணையாதிருக்க வழி கூறுங்கள்”. “என் குலக்கொடி பட்டுப் போகாதிருக்க ஒரு மார்க்கம் காட்டுங்கள்” என்று கெஞ்சி நின்றிடும் முறையிலும், இந்தத் தாய்மார்கள், எமது குடும்பம் சிதையாதிருக்க, எமக்கு வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைத்திடச் செய்யுங்கள் என்று, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள லால்பகதூரிடம் கேட்டு நின்றனர்.

லால்பகதூர் ஏழைக் குடியில் பிறந்தவர். வாழ்க்கை இன்னல்களை நன்கு உணர்ந்தவர். வாழ்க்கை இன்னல்களை ஏற்றுக்கொள்ளும் துணிவற்று, குடும்பம் என்பதே

அ.க.—7