பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

அமெரிக்கத் தூதுவர் செஸ்டர்பவுல்ஸ் கூறுகிறார்,

இப்போது நாங்கள் அனுப்பத் திட்டமிட்டிருப்பது நாற்பது இலட்சம் டன் கோதுமை, 300,000 டன் அரிசி. இதுவரை நாங்கள் அனுப்பியிருப்பது 230 இலட்சம் டன் உணவுப்பொருள்” என்கிறார்.

படிக்கும்போது இந்தச் செய்தி பாகெனவா இனிக்கும்?

இன்று நேற்றல்ல, நெடுநாட்களாக உங்களுக்கு நாங்கள் உணவுப் பொருளை அனுப்பியபடி இருக்கிறோம் என்று சுட்டிக்காட்டுவது—குத்தலுக்காக அல்ல என்றே வைத்துக்கொள்வோம்—பொருளற்றதா?

இப்படி உணவுப்பண்டத்துக்கே திண்டாடுகிறீர்களே! இத்தனைக்கும் விவசாய நாடு என்கிறீர்கள், கிராமங்களே முதுகெலும்பு என்கிறீர்கள், புதிய தேக்கங்கள் கட்டியிருக்கிறீர்கள், அணைகள் பலபல என்று பட்டியல் காட்டுகிறீர்கள். நவீன விஞ்ஞான முறை எனப் பேசுகிறீர்கள், ஜப்பானிய முறை என்கிறீர்கள், சத்து உரம் என்கிறீர்கள் மின்சார இறைப்பு என்கிறீர்கள். சமுதாயநலத் திட்டமென்கிறீர்கள், கூட்டுறவு என்கிறீர்கள், நிலச்சீர்திருத்தச் சட்டம் என்கிறீர்கள், பொறுக்கு விதை, பொலிகாளை, எருக்குழி, மண் அரிப்புத் தடுப்பு என்று பலப்பல பேசுகிறீர்கள், என்றாலும் இந்த ஆண்டுகளில் நாங்கள் டன்களை உங்களுக்கு அனுப்பி இருக்கிறோமே, என்ன ஆயிற்று உங்கள் திட்டங்கள்? என்ன கதியாகிவிட்டது கொட்டிய ஆயிரமாயிரம் கோடிகள்—என்றெல்லாம் செஸ்டர் பவுல்ஸ் கேட்கிறார் என்றல்லவா பொருள்! சுதந்திர தினவிழாவன்று கிடைத்திடும் பொற்பதக்கமா இது? பொறுப்பிலுள்ளவர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும், போய்ச் சேர்ந்ததுகள் அல்ல!

தம்பி! அமெரிக்கத் தூதர் சொல்கிறார், எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம் உணவுப் பொருள், எம்மிடம் தயாராக இருக்கிறது. ஏற்றிச் செல்லும் கப்பல்களும் உள்ளன, தேவைக்கு அதிகமாகவே. ஆனால் நாங்கள் ஏற்றி அனுப்பும் பொருளை இறக்கி எடுத்திட முடியவில்லையே இந்திய சர்க்காரால், நாங்கள் என்ன செய்ய என்று கேட்கிறார். ஆமாம் என்கிறார்கள் லால்பகதூர்கள்; அப்படியானால்... என்று கேட்கிறார்