பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

எத்தனை கண்டனம் என்மீது! எத்துணை எரிச்சல் கொண்டனர் பழமை விரும்பிகள். மீராபென் கூறிடும் நிலைமைக்கு என்ன பதில் கூறுவர்!

பத்து ஆண்டுகள் பொறுத்துப் பார்த்தேன். சாதுக்கள் உலகம் தன்னைத்தானே திருத்திக் கொள்ளும் என்று, அதற்கான நேர்மைமிக்க முயற்சி எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்த்துக் கிடந்தேன்.

ஆண்டு பல கழித்து நான் ரிஷிகேஸ் செல்கிறேன் காண்பது என்ன? அவ்விடம் முன்பு போலவே பாபக்கூடமாக இருந்திடக் கண்டேன். பதறிப் போனேன். காவி உடையைக் காணவே சகிக்கவில்லை.

சாதுக்களின் ‘கோட்டம்’ எத்துணை தீமைகளின் பிறப்பிடமாக இருப்பிடமாக இருந்து வருகிறது என்பதனை எடுத்துக் காட்டியதுடன் விடவில்லை மீராபென்; இத்தகைய சாதுக்களை அரசு ஆதரிப்பது அக்கிரமம் என்பதையும் கூறினார்.

புனித ஸ்தலங்கள் என்பவைகளிலே புனிதவான்கள் என்று உலவிக்கொண்டுள்ள சாதுக்களைத் திருத்தி நல்வழிப்படுத்திட வேண்டிய அவசரப் பிரச்சினையைக் கவனியாமல், சர்க்கார் இந்தச் சாதுக்களை உற்சாகப்படுத்தி ஆதரவு காட்டுவது தவறு என்பது என் கருத்து.

இந்தக் கண்டனத்துக்குப் பிறகேனும் நிலைமை திருந்தியதா என்றால், இல்லை இதற்குப் பிறகும் கும்பமேளாக்களிலே உடையற்று உலா வருகிறார்கள் இந்தச் சாதுக்கள். அவர்களுக்குள்ளே அமளி மூள்கிறது! அருவருக்கத்தக்க தீயசெயல்களில் ஈடுபட்டனர் என்று சிலர் பிடிபடுகின்றனர்; தண்டனை பெறுகின்றனர். மற்றவர்களோ மகேசன் அருளால் நாம் பிடிபடவில்லை! என்று எண்ணி, பூஜா மாடத்தில் கோலாகல வாழ்வு நடாத்தியபடி உள்ளனர்.

ஒழுக்கக் கேட்டினை ஒழித்திடச் சாதுக்களைப் படை திரட்டி அனுப்புவதற்கு முன்பு நந்தா, சாதுக்களிடம் நெளிந்திடும் ஒழுக்கக் கேட்டினைப் போக்கிட வழி என்ன