175
அவர்கள் இசையினிலே
வண்ணம் புகழுடன்
பொன் மின்னும்,
என்று கூறுகிறார். பளபளப்பு, மெருகு, இவை தேவையா! அவர்கள் இசையிலே கிடைக்கும், போய்ப் பெற்றுக்கொள், அவைதான் பெறத்தக்கன என்று கருதினால்—என்ற கருத்துப்படக் கூறுகிறார்; கூறிவிட்டு,
பிடிசாம்பல்
வாய்க்கரிசி
இவைபற்றி என் பாடல்!
குளிர்கொட்ட
மழைவாட்ட
குமுறிக்கிடப்போர்
விழி இழந்தோர்
முடமானோர்
இவர்பற்றி என்கவிதை!
இஃதே என் காவியம் காண்!
என்று தெரிவிக்கிறார்.
தம்பி! 1873-ம் ஆண்டு பிறந்த ஆங்கிலக் கவிஞர் இந்த அளவுக்கு ஏழைக்காகப் பரிந்து பேசிட முனைந்திருக்கிறார்:
இருபதாம் நூற்றாண்டில் இருக்கின்றோம்; இந்தக் காலத்திலாவது நாம் இடர்ப்பட்டு, இழிவு படுத்தப்பட்டு இல்லாமையால் தாக்கப்பட்டுக் கிடக்கும் எளியோர்க்கு நல்வாழ்வு கிடைப்பதற்கான முறையில் ஓர் அரசுமுறை அமைத்திடும் முயற்சியில், ஈடுபட வேண்டாமா!
செந்நெல் மணியினைக் காணும்போது தம்பி சேற்றிலே இறங்கி உழுது அதனை விளைவித்த உழவனை நினைவிற்கொள்ளவேண்டும். பாலையும் பாகையும் பழத்தையும் சுவைத்திடும்போது, இவற்றைப் பெறமுடியா நிலையிலுள்ள எளியோர்களை வாழ வைத்திட வேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிடவேண்டும். உழைப்பின் உயர்வுபற்றிப் பேசிவிடுதல் மட்டும் போதாது. உழைப்பவன் உருக்குலைய அவன் தந்த செல்வத்தில் சிலர் புரண்டு கிடந்திடும் சீர்கெட்ட நிலையை மாற்றிட வழிகாண வேண்டும். இயற்கை வழங்கிடும்