186
கொண்டனர். என் நன்றி அவர்களுக்கு. ஒரு சிலர், என் திறமையைப் பரீட்சிக்க வேண்டும் என்ற முறையில் கேள்விகளைக் கேட்கிறார்களோ என்ற எண்ணம் எழத்தக்கவிதமான பிரச்சினைகளைக் கிளப்பினார்கள் என்றாலும், மொத்தத்தில் எனக்கு, நமது நிலைமையைத் தெளிவு படுத்தவும், கொள்கையை வலியுறுத்தவும் அவர்கள் நல்ல முறையில் வாய்ப்பளித்தார்கள். இது எனக்காக அவர்கள் செய்த உதவி என்பதனைவிட, நாம் ஈடுபட்டிருக்கும் தூய காரியத்துக்குத் துணை செய்திருக்கிறார்கள் என்று கூறுவதுதான் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.
வந்தமர்ந்த சில விநாடிகளுக்குள்ளாகவே ஒரு நிருபர்—டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் என்று நினைவு—“என்ன சொல்லப் போகிறீர்கள்? ஆரம்பிக்கலாமே!” என்றார்.
“என் கருத்தினை மாநிலங்கள் அவையில் கூறியிருக்கிறேன் மேற்கொண்டு ஏதாகிலும் தேவை என்றால் கேளுங்கள், கூறுகிறேன்” என்று நான் கூறினேன். கேள்விகள் புறப்பட்டன. ஒருமுறை எதிரே இருப்பவர், அடுத்தது வலப்பக்கத்தில் ஒருவர். திடீரெனக் கோடியிலிருந்து மற்றொருவர், அதைத் தொடர்ந்து இடப்புறத்திலிருந்து ஒருவர், பிறகு மூன்றாவது வரிசைக்காரர், இப்படிக் கணைகள்! சுவையும் இருந்தது, சூடும் தென்பட்டது. அன்பு ததும்பிடும் போக்கும் கண்டேன், அருவருப்பை அடக்கிக்கொள்ளும் போக்கும் இருந்தது.
ஜனவரி 2-ம் நாள், தி. மு. கழகம் என்ன திட்டம் மேற்கொண்டது? விளைவு என்ன? விளக்கம் என்ன? என்று ஒரு நிருபர் கேட்டார்.
ஜனவரி 26-ம் நாள், இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி என்று ஆக்கிவிடுவதைக் கண்டிக்கத் துக்க நாள் நடத்த, தி. மு. க. திட்டமிட்டது, துவக்கத்திலிருந்தே முதலமைச்சரும் காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், வன்முறைச் சூழ்நிலை எழக்கூடிய விதமான முறையில் பேசலாயினர். காங்கிரஸ் இதழ்களில் அந்தப் பேச்சுகள் வந்துள்ளன. கறுப்புக் கொடிகள் அறுக்கப்படும், கொளுத்தப்படும், கறுப்புக் கொடி கட்டு-