பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

கிறார்களே அது ஒழிய வேண்டும். ஒரு உதாரணம் தருகிறேன். நான் நண்பர்களுடன் மோட்டாரில் வடஇந்தியப் பகுதிகள் சென்றிருக்கிறேன்—மத்தியப் பிரதேசம் போன்ற இடங்கள். அங்கு வடஇந்தியர்கள், ஆங்கிலம் தெரிந்தவர்கள், எங்களுக்கு இந்திதெரியாது என்று தெரிந்த பிறகும், வேண்டுமென்றே பிடிவாதமாக, நாங்கள் கேட்பவைகளுக்கு, இந்தியில் தான் பதில் அளித்தார்கள். இது என்ன மனோபாவம் என்றேன். அவர் புரிந்துகொண்டார் என்று எண்ணுகிறேன்.

டில்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர், வரும்போதே சொன்னார் “நான் இந்திவாலா” என்று, நான் கேட்காமலிருக்கும்போதே. அவர்தான், சில கேள்விகளை வேண்டுமென்றே, என் பொறுமையைக் கண்டறியும் முறையில் கேட்டார்.

அவர் கேட்ட கேள்வி இது.

“எவ்வளவுதான் நீங்கள் மறுத்தாலும், பொது மக்கள், தி. மு. கழகமும் வேறுசில அரசியல் கட்சிகளுந்தான் வன்முறைச் செயலுக்குக் காரணம் என்று எண்ணுகிறார்கள். அந்த நிலையில், தமிழ்நாடு, இந்தியாவின் மற்றப் பகுதியை மிரட்டிப் பணியவைக்க முயலுகிறது, இது முறையா?” என்று கேட்டார்.

ஐயா! உம்முடைய கேள்வியின் அடிப்படையே தவறு. தி. மு. கழகம் வன்முறையைச் செய்யவில்லை, தூண்டவில்லை, பங்கு இல்லை, என்று நான் பன்னிப் பன்னி மறுத்த பிறகும், நீர், அந்தத் தவறான எண்ணத்தை விட்டுவிடாமல், அதை அடிப்படையாக்கிக் கொண்டு, வாதங்களை அடுக்கும் போதே, உமக்கு நான் பதில் கூறமுடியாது என்று கூறும் உரிமை எனக்கு இருக்கிறது. என்றாலும், கேட்டதற்குச் சொல்கிறேன்; தமிழ்நாடு, இந்தியாவின் மற்றப் பகுதியை மிரட்டிப் பணியவைக்கக் கிளம்பவில்லை. சொல்லப்போனால், இந்தியாவிலேயே, பலம்குறைந்த பகுதியாகத் தமிழ்நாடு இருக்கிறது என்று கூறினேன். கூறிவிட்டு, ஐயா! வன்முறைக்குக் காரணம் தி. மு. கழகம் என்று முதலமைச்சர் கூறியதை வைத்துக்கொண்டு பேசுகிறீரே, அதே முதலமைச்சர் சில நாட்களுக்குப் பிறகு, கள்ளச்