பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

சாராயம் காய்ச்சுவோரும், கள்ளக்கடத்தல் பேர்வழிகளும் போலீசாரிடம் தங்களுக்கு இருந்து வந்த வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று அறிக்கை விடுத்திருப்பது தெரியுமா என்று கேட்டேன். அப்படி ஒரு அறிக்கை வெளிவந்ததாகவே அந்த நிருபர் காட்டிக்கொள்ளவில்லை. கெட்டிக்காரர்!

“பாராளுமன்றக் கூட்டம் ஒரு தொடராவது தெற்கே நடத்தப்பட வேண்டும் என்று ஒரு யோசனை கூறப்படுகிறதே, அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று ஒரு நிருபர் கேட்டார்.

ஆமாம், மேலும் பல யோசனைகள் கூடக் கூறப்படுகின்றன. பிரதமமந்திரி வடக்கே இருந்தால், குடியரசுத் தலைவர் தெற்கே வசிக்க வேண்டும், கடற்படைத் தலைமைக் காரியாலயம் வடக்கே இருந்து தெற்கு மாற்றப்பட்டு கொச்சியில் அமைக்கப்பட வேண்டும், இத்தகைய அமைப்புகள் இந்தியாவில் பல்வேறு இடங்களிலே பரவலாக்கப்படவேண்டும் என்றெல்லாம் யோசனைகள் கூறப்படுகின்றன. இவைகள், தென்னக மக்களின் மனத்துக்கு ஒருவிதமான ஆறுதல் அளிக்கலாம்—என்று கூறினேன்.

“மும்மொழித் திட்டப்படி இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டால், உமது போக்கு எப்படி இருக்கும்?” என்று ஒரு நிருபர் கேட்டார்.

நான் என் எதிர்ப்பைத் தெரிவிப்பேன். இப்போதே அங்கு இந்தி கற்றுத் தரப்படுகிறது. இந்தி தவிர வேறு எந்த இந்திய மொழி கற்பதற்கும் வகை செய்யப்படாததால் மறைமுகமாக இந்தி கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது வடக்கே உள்ளவர்களோ, தென்னக மொழியைக் கற்க முன்வரவில்லை. மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் படிக்கிறார்கள். இந்தியைக் கட்டாய பாடமாக்கினால் எங்கள் மக்கள் வேதனைப்படுவார்கள்; எதிர்ப்பார்கள், என்று தெரிவித்தேன்.

“மத்திய சர்க்கார் அலுவல்களுக்கான பரீட்சை சம்பந்தமாக என்ன கருதுகிறீர்” என்று கேட்டார் ஒரு