27
அழுகிறீர்கள்? ஆட்சி மொழியாக இந்தி இருந்தால் என்ன? தமிழ் தாழ்வடையுமோ? அகம் என்ன, புறம் என்ன, எட்டுத்தொகை என்ன, பத்துப்பாட்டென்ன, இவைகளைப் படித்திடலாகாது என்று தடுத்திட இயலுமோ! இன்பத் தமிழ், கேவலம் அரசாங்க அலுவலிலே இருக்காதே தவிர, வீட்டிலிருக்கும், அங்காடியில் இருக்கும், மன்றத்திலிருக்கும், மாதரின் நெஞ்சமிருக்கும், மழலையரின் மொழியில் இருக்கும், என் உள்ளத்திருக்கும் உன்னிடமும் இருக்கும், ஆகவே தமிழ் மகனே! கவலைகொள்ளற்க! என்று கூறிடுவர், தமிழின் இனிமையினை அறிந்தவனே யானும் என்று கூறி, அதனை மெய்ப்பிக்க,
திருவே என்செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற் ஜோதிமிக்க
உருவே என் உறவே என் ஊனே
ஊனின் உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற
கருவே என் கற்பகமே கண்ணே
கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய், காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் துறையுறையும் அமர ரேறே
என்று பாடிடக்கூடும். பக்கம் நின்று சிலர், என்னே தமிழ்ப்பற்று! என்னே தமிழினிமை! என்று பேசி மகிழ் விக்கக்கூடும்.
இப்போதேகூடச் சிலர் இதுபோல், தமிழின் இனிமை. பெருமை, தொன்மை, மென்மை, வளம் வனப்புப் பற்றி கேட்போர் நெஞ்சு நெக்குருகப் பேசி, இந்தி ஆதிக்கத்தால் தமிழுக்கு ஆபத்து ஏற்படாது என்று வாதாடுகின்றனர்.
மாசறு பொன்னே!
வலம்புரி முத்தே!
காசறு விரையே!
என்றெல்லாம் கொஞ்சுமொழி பேசிய கோவலன்தான் பின்னர், கண்களில் கொப்பளிக்கும் நீரும், காலிற்சிலம்பும் கொண்ட நிலையினளாக்கினான் கண்ணகியை...மையல் வேறோர் மாதிடம் கொண்டதால்.
எனவே, தம்பி! இவர் போன்றாரின், புகழுரையால் மட்டும் தமிழுக்கும் தமிழர் நல்வாழ்வுக்கும் வர இருக்கும்