பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

ஆபத்தைத் தடுத்திட முடியாது—நாம் மேற்கொள்ளும் அறப்போரின் பலனாக எழும் தியாக உணர்வே தீந்தமிழைக் காத்திடவல்லது. அத்தகைய தொண்டாற்றும் தூயமணியே! உனைக் காண்பதிலும், உன்னுடன் அளவளாவுவதிலும் நான் பெறும் மகிழ்ச்சி, என்னை அந்தத் தொண்டினைத் தொடர்ந்து நடாத்திடத் துணை செய்கிறது. வாழ்க நின் ஆர்வம்! வளர்க உன் தியாக எண்ணம்! வெல்க தமிழ்!


26-7-1964

அண்ணன்,
அண்ணாதுரை