பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சி கடிதம் : 2

இதயத்தில் பூத்த மலர்



சட்ட மேம்பாடு பற்றிய சில பொதுக் கருத்துக்கள்
சட்டத்தைத்துச்சமென எண்ணுபவர்களின்
                       கூற்றுகளும் அவற்றின் விளக்கங்களும்
இந்தி எதிர்ப்பு அறப்போரும் சிறைச் செலவும்

தம்பி,

ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு—அதற்கான பேச்சு எழுந்து வளர்ந்துகொண்டு வருகிறபோது—எவ்வளவு வேண்டுமானாலும் அந்தச் சட்டம் வேண்டாம்—கூடாது—தீது என்று வாதாடலாம், மறுத்துரைக்கலாம், எதிர்ப்புச் செய்யலாம். ஆனால் இவைகளை மீறி ஒரு சட்டம் இயற்றப்பட்டுவிட்டால், பிறகுகூட அதை எதிர்த்துப் பேசிக் கருத்து வேற்றுமையைக் கூறலாம். ஆனால், மீறுவது மட்டும் கூடாது. மீறுவது சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் பாங்கினைச் சமுதாயம் கொண்டு ஒழுகவேண்டும் என்று உள்ள நிலையைக் கெடுத்துவிடும். அது கெட்டுப் போய்விட்டால் பிறகு சமூகக் கட்டுக் கோப்பைச் சிதையாதபடி பாதுகாத்து வரும் சக்தி பாழ்பட்டு விடும். அந்தச் சக்தி பாழ்பட்டுவிட்டால் பிறகு நாட்டிலே காட்டுமுறை ஏற்பட்டுவிடும் என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள்.

அதிகாரம் ஊட்டிவிடும் ஆணவத்தின் காரணமாக, பலர் குளறிக்கொட்டியிருப்பதனை மிக மிக நாகரிக