காஞ்சிக் கடிதம்: 3
அவர் படும் அல்லல்
காமராசரின் கருத்தைக் குடையும் கழகம்
கழகம் ஆளும் கட்சி ஆகிவிடும் என்பதால் காமராசருக்கு மனக் குமட்டல்
பொதுமக்களின் ஆணைக்கு முன்னால் எந்த ஆர்ப்பரிப்பும் நில்லாது; நிலைக்காது!
பதினேழு ஆண்டு கடந்தும் தீராத சோற்றுப் பிரச்சினை
நல்லவரிடம் பொல்லாத வியாதி
தம்பி,
பைத்தியக்காரர்கள்!
பகற்கனவு காண்பவர்கள்!
பெரிய இடத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் ‘பட்டங்கள்’ இவை! எவ்வளவு உயரத்திலே தூக்கிக் கொண்டுபோய் என்னை உட்கார வைத்தாலும், எத்தனை பலமான குரலிலே பல்லாண்டு பாடினாலும், எத்தனை விதவிதமானவர்களைக் கொண்டுவந்து நிறுத்தி என் பல்லக்கைத் தூக்கச் சொன்னாலும், இந்தப் பாரதம் மட்டுமல்ல, பாரே புகழ்கிறது என்று பாமாலை சூட்டினாலும் என் எண்ணம் மட்டும் திரும்பத் திரும்ப ‘அவர்கள்’ பற்றியே தான் செல்கிறது, ‘அவர்களை’ப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே! ‘அவர்-