48
விட்டார்!!—என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் பேசிக் கொண்டனர்.
தம்பி! நான்கூடக் கொஞ்சம் அந்தப் பேச்சைக் கேட்டு மயங்கினேன்—இப்போது தெரிகிறது, அவர் எத்தனை அடுக்குள்ள மாடி சென்றாலும், அரசோச்சினாலும், அவருடைய கண்களுக்குத் தெரிவது, கண்களை உறுத்துவது, தி. மு. க. என்ற பேருண்மை! அது அவருடைய இயல்பை அல்ல, தி. மு. க.வின் நிலையைக் காட்டுகிறது. எவர் எந்நிலை பெற்றிடினும், அவர் அரசியலில், சந்தித்துத் தீரவேண்டிய சக்தி, சமாளித்தாக வேண்டிய பிரச்சினை, பதிலளித்துத் தீரவேண்டும் என்று கேட்டு நிற்கும் கேள்விக்குறி. தி. மு. க! ஆமாம், தம்பி! அதனால் தான், அவ்வளவு மேலான பதவிபெற்று, பராக்குக் கூறுவோர் படைபெற்று, ‘சாந்துப் பொட்டுத் தளதளக்க சந்தனப்பொட்டு மணமணக்க’ என்று சிந்து பாடுவார்களே, அதுபோன்ற நிலையினைப் பெற்று, ‘தர்பார்’ நடத்தினாலும் அவருடைய நினைப்பு, நம்மைப் பற்றி, அவருடைய பேச்சு நம்மைப்பற்றி! எங்கு சென்றாலும், எத்தனை உயர்வு பெற்றாலும், என்ன அதிகாரம் கிடைத்தாலும், எவ்விதமான அமுல் நடத்தினாலும், எவரெவர் வாழ்த்தினாலும், வழிபட்டு நின்றாலும், என்னை மறக்க இயலாது உம்மால்! எட்டி எட்டிச் சென்றாலும் உமது மனத்தைத் தொட்டிழுக்கும் நான் எழுப்பிடும் கேள்வி! என்று கூறுவதுபோல, நமது கழகம் காமராஜரின் கருத்தைக் குடைந்தபடி இருக்கிறது. குடைச்சலே, தம்பி! மகா பொல்லாத நோய்! அதிலும் மனக்குடைச்சல் இருக்கிறதே, ஏ! அப்பா! தொல்லை நிரம்பியது, துளைத்தெடுக்கும், படாத பாடு படுத்திவிடும். அந்தக் குடைச்சல் காரணமாக அவர் நம்மை,
பைத்தியக்காரர்கள்
பகற்கனவு காண்பவர்கள்
என்று முச்சங்கத்தினரும் ஒருங்கே கூடிநின்று, தமிழ் மொழிக்கே அணியெனத்தகும் சொற்களாம் இவை தமைச் சொரிந்த வித்தகரே! வாழ்க! வாழ்க! வளர்க நும் செத்நாப் புலமை! என்று கூறிடுவர் என்று கொலுமண்டபத்துக் கோலேந்திகளும், குழலூதிகளும் கூறிக் குதூகலித்திடத்தக்க முறையில், நம்மை ஏசியிருக்கிறார்.