பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

“ஏழைக்கு இதம் செய்ய எண்ணுகிறாயா? அது உன்னால் முடியாது. உன்போல அநியாய வழிகளிலே பணம் திரட்டும் பேர்வழிகளுக்கு என்ன தண்டனை தரப் படுகிறது தெரியுமா! நீங்களாக உண்மையை உணர்ந்து, உள்ளம் உருகி, அநீதியைத் துடைத்து இதம் செய்ய வேண்டும் என்று நல்லெண்ணத்துடிப்புக் கொண்டாலும், இதம் செய்யும் ஆற்றல் அற்றுப் போனவர்களாகி விடுகிறீர்கள். உன் நோக்கம் சிறந்தது, ஆனால், வஞ்சிக்கப்பட்ட, இம்சிக்கப்பட்ட ஏழைக்கு இதம் செய்ய உன்னால் முடியாது; காலம் கடந்துவிட்டது; விஷயம் முற்றிவிட்டது; ஏழையின் வாழ்வு பாழ்பட்டு விட்டது; உன்னால் விளக்கேற்ற முடியாது” என்றான்.

சீமான் மகன், இம்சிக்கப்பட்ட ஏழைகள் அனைவரையும் தேடிக் கண்டு பிடித்து, ஒவ்வொருவருக்கும். இதம் செய்திட முடியாதுதான். ஆனால், என்னால் இயன்ற மட்டும், என்னிடம் உள்ள செல்வத்தை இதற்குப் பயன்படுத்துவேன்” என்றான்.

அந்த நண்பன், அக்கறையற்ற குரலில், “எத்தனையோ தர்ம ஸ்தாபனங்கள் உள்ளனவே, உன் பணத்தைப் பெற” என்றான்.

“சீமான் மகனோ, “கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கதை அல்லவோ அது. வேண்டாம். நான் ரொட்டி வாங்கிக்கஷ்ட நஷ்டப் பட்டவர்களுக்கே உதவி செய்ய விரும்புகிறேன்.” என்றான்.

“கோதுமையை உன் தகப்பனார் மடக்கிப் போட்டு விலை ஏற்றத்தை மூட்டி விட்டாரே அதன் காரணமாக, ஏழைகள் உணவு பெறுவதிலே, ஏற்பட்ட நஷ்டத்தொகையைத் திருப்பித்தர, எவ்வளவு பணம் தேவைப் படும் தெரியுமா?” என்று கேட்டான். “எனக்குத் தெரியாது. ஆனால் என்னிடம் உள்ள பணம் 2,000,000 டாலர்கள்” என்றான் சீமான் மகன். “கோடி டாலர்கள்” இருந்தாலும் போதாதப்பா, கொடுமைக்கு ஆளான மக்களுக்கு இதம் செய்ய; நியாயம் வழங்க. அநியாய வழியில் திரட்டப்படும் பணத்தால் முளைத்திடும் ஆயிரத்தெட்டுக் கேடுகளை நீ என்ன அறிவாய்!! ஏழையிடம் கசக்கிப் பிழிந்து வாங்கப்பட்ட ஒருகாசு, ஓராயிரம் தொல்லையை ஏழைக்குத் தருகிறது. உன்னால் முடியாது, தந்தையின் வாணிப முறையின் காரணமாகக் கொடுமைக்கு ஆளான