பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சிக் கடிதம்: 5

நச்சரவு வளர்க்கின்றார்



பாஞ்சாலத்தில், இராஜஸ் தானத்தில், கேரளாவில்,
                             பீகாரில, மைசூரில் -எங்கும் ஊழல் மயம்
கடுங்கோபம் காமராசருக்கு வருவதற்குக் காரணம்,
                                               களத்தில் நிற்பவர் நாம் என்பதே
நந்தாவின் கைவிளக்கு சதாசர் சமிதி
சந்தானம் கமிட்டியின் கருத்துகள்
பிரதம நீதிபதி மகாஜன் காங்கிரஸ் கட்சிக்குக்
                                                          கூறியுள்ள புத்திமதிகள்

தம்பி,

காணீர் கண்குளிர காந்திமகான் சீடர் இவர்!
தியாகத் தீயினிலே குளித்தெழுந்து வந்திட்டார்!
தொண்டு செய்வதன்றிக் கொண்டவிரதம்
                                                                                  வேறில்லை
பண்டிருந்த பாரதத்தைக் கண்டிடவே
                                                                      உழைக்கின்றார்!
காட்சிக்கு எளியரிவர் கடுஞ்சொல்தனை அறியார்!
ஏழை எளியோர்க்கு ஏற்றமது அளித்திடுவார்!
உழைப்பதற்கே உருவெடுத்தார் ஊதியம்
                                                                            பெறுதற்கல்ல!