காஞ்சி கடிதம் : 1
இடைவெளிக்குப் பிறகு...!
இடையில் கடிதம் எழுதாமைக்குக் காரணம்
ஜோரேசுக்கு ‘வண்டி’யே ‘சர்க்கார் மாளிகை’—
எனக்குக் ‘காஞ்சி’யே ‘திராவிடநாடு’
இந்தி எதிர்ப்புக்கு மக்கள் பாராட்டு
துதி பாடிக் கிடந்தவர்களின் தூற்றலைப்
பொருட்படுத்தாதே!
மூட்டி விடுவோன்—கேட்டு மருள்வோன்—
மன்றத்தான் — தெளிவளிப்பான்—உரையாடல்கள்
கழகம் புயலுக்குத் தப்பி வளைந்திடும் நாணல்
ஆங்கிலமே ஆட்சிமொழி ஆகவேண்டும் என்பார்
கருத்துரைகள்
இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்தவர்களின் கனிவுரைகள்
தம்பி,
நீண்ட பல நாட்களுக்குப் பிறகு—நாட்களா?—பல திங்களுக்குப் பிறகு மடல் மூலம் உன்னுடன் அளவளாவி மகிழும் வாய்ப்பினைப் பெறுகிறேன். என் இதயத்துக்குப் பெரிதும் வேதனை தந்த இடைவெளி. குற்றம் உன் மீது துளியும் இல்லை. என் நிலை விளைவித்ததே இந்த இடைவெளி. கிழமை தோறும் நாட்டு நடப்புகளைக் காண்டதால் என் உள்ளத்தில் எழும் எண்ணங்களை உன்னிடம் எடுத்துக்கூறி, உன் இசைவு எத்தகைய செயல் முறைக்குக் கிடைக்கும் என்பதனைக்