பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

115

ம:– அது காதிலே விழுந்ததும் மேல் இடத்திலே உள்ளவங்களுக்கு அதிகமான கோபம். இந்த விஷயம் தெரியாமல் நான், அந்த அதிகாரி விஷயமாச் சொன்னேன். மேல் இடம் வேணும் அந்த ஆசாமிக்கு! கணக்குப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தால் போதாது, வழக்கே போட்டாகணும்... அப்பத்தான் ஆசாமியோட துடுக்குத்தனம் போகும்னு கூச்சலிட்டு, என்னை விரட்டிவிட்டுது...

ம.மா:– வழக்கே போடணுமாமா...என்ன அநியாயம் இது...வாரி வாரிக் கொடுத்தவனாச்சே...

ம:– வருத்தப்படவேண்டாம், கோபத்தாலே அவ்விதமாப் பேசிவிட்டாங்க...நான் ஒரு சபதம் சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கறேன்.......நீங்க யார் பேச்சையோ கேட்டு வீணான பழி சுமத்தறிங்க. மாரியப்பப் பிள்ளையோட தேசபக்தி உங்களுக்குத் தெரியாது. அவருடைய உதவியாலேதான் இந்தத் தடவை காங்கிரசு ஜெயிக்கப் போகுது...அவருக்கு அவ்வளவு செல்வாக்கு...

ம.மா:– அது மேல் இடத்துக்கும் தெரியுமே. நம்மிடம் கொடுக்கல் வாங்கல் தொடர்பு வைத்துக்கொண்டுள்ள கிராமம் 50க்கு மேலே இருக்குமே தவிரக்குறையாதே...

ம:– சொன்னேன் விவரமா...மாந்தோப்புக் குத்தகை எடுத்து இருக்கிற விஷயம், மாரியம்மன் கோயிலுக்கு அபிஷேகம் செய்திருக்கிற விஷயம், உங்க மச்சினனுக்கு உள்ள செல்வாக்கு, எல்லாம் சொல்லி, இந்தத்தடவை முழுமூச்சாக அவர் ஈடுபட்டு, காங்கிரசுக்கு வெற்றி தேடிக்கொடுக்கப் போகிறார்......அப்புறமாவது அவருடைய செல்வாக்கையும் தேச பக்தியையும் உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுங்க என்று சொன்னேன்...

ம.மா:– சொன்னயா! அதுதான் சரி...

ம:– அதிகாரியை மாற்றித்தான் ஆகணுமான்னு, கடைசியிலே கேட்டாங்க, மேலிடத்திலே...நான் சொன்னேன், இப்ப வேண்டாம், தேர்தல் முடியட்டும், மாரியப்பப் பிள்ளையோட செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டு, பிறகு