பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

அதிகாரியை மாத்துங்க என்று சொல்லி விட்டு வந்தேன். உங்களை மலைபோல நம்பி இந்தச் சபதம் செய்துவிட்டேன். அதிகாரியை மாற்றிவிடலாம் அரை நொடியிலே.... உங்களோட செல்வாக்கு எப்படிப்பட்டது என்பது மேலிடத்துக்குத் தெரிந்ததும்...

ம. மா:– பகவானோட கடாட்சத்திலே என் செல்வாக்கு எந்த விதத்திலேயும் பழுதாகிப் போகவில்லை. காங்கிரசுக்கு வெற்றிதேடிக் கொடுக்கவில்லையானா என்பேர் மண்டி மாரியப்பனில்லே...பார்த்து விடுவோம்...என்ன செலவாகிவிடப்போகுது...ஒரு நூறு மூட்டை கெட்டுப்போச்சுன்னு எண்ணிக் கொண்டாப் போகுது...

ம:– என்னத்துக்குங்க கெட்ட பேச்சு! ஒரு சிலோன் பர்மிட் கிடைச்சா கிடைக்கக்கூடியதிலே நூறிலே ஒரு பாகம் ஆகுமா. நீங்க செலவு செய்யப்போகிற தொகை...

ம. மா:– சிலோன் பர்மிட்டா? மண்டலம்! அது மட்டும் எனக்குக் கிடைக்கும் என்கிற உறுதி இருந்தா, எதிரியை ஓடஓட விரட்டி அடிக்கறேன்...பணம் பத்து ஆயிரம் ஆகும் என்றாலும் கவலை இல்லை...ம:– சிலோன் பர்மிட்டு, காங்கிரசு வெற்றிபெற்ற பத்தாம் நாள் உங்க வீடுதேடி வரும்.

மண்டலம்:– குமரப்பனா! ஏம்பா! என்னோட ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே... பத்தாயிரம் கடன் வேண்டும்னு மனு போட்டிருக்கிறயாமே... குமரப்பன்:– ஆமாம் புதிய தொழில் ஒன்று ஆரம்பித்து விட்டுத் தொல்லைப்பட்டுக்கிட்டு இருக்கறேன்...கடன் தேவைப்பட்டுது.

ம:– என்னிடம் சொல்லப்படாதான்னு தான் கேட்கறேன். நீ சொல்லவில்லை என்றாலும் எனக்குத் தெரியாமலா போய்விடும்...