பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

கு:– அதெப்படித் தெரியாமல் போய்விடும்......அதான் ஒருத்தன் இருக்கிறானே எனக்கு மாமனாருன்னு பேர் வைத்துக்கொண்டு, அவன் சொல்லி இருப்பான்....

ம:– சேச்சே! அவரு ஒரு பேச்சும் சொல்லவில்லை பாங்க் தலைவர் இல்லே பார்த்தசாரதி, அவர் தான் சொன்னார். உன்னைப்பற்றி விசாரித்தார், ஆசாமி எப்படி? குணம் எப்படி? நிலவரம் எப்படி? என்றெல்லாம்...

கு:– எல்லா விவரமும் தெரிவித்திருக்கிறேனே...

ம:– சொன்னாரு...ஆனா அதெல்லாம் உண்மைதானான்னு கேட்டாரு. என் பேச்சிலே அவருக்கு ஒரு நம்பிக்கை......போன வருஷம் நம்ம நாராயணன் நாலாயிரம் ரூபா கடன் கேட்டிருந்தான்......அவனோட சொத்து மதிப்பு போதாதுன்னு யாரோ புகார் செய்துவிட்டாங்க. என்னைத்தான் கேட்டாரு. நான் சொன்னேன், நாராயணன் நாணயஸ்தன், அவனை நம்பி, நாலு என்ன எட்டு ஆயிரம்கூடக் கொடுக்கலாம் என்று, கொடுத்தாரு.

கு:– நம்ம விஷயமாகவும் சொல்லி ஏற்பாடு செய்யப்பா...

ம:– எனக்கு இல்லையா அதிலே அக்கறை...ஆனா எனக்கு இப்ப வேலை நெருக்கடி...தெரியுமே உங்களுக்கும். தேர்தல் வேலை. அந்த வேலையாத்தான் பாங்க் தலைவரிடம் போயிருந்தேன். அவர் ஒரு பட்டியல் கொடுத்தார் இன்னின்னாரைப் பார்த்தா நல்லது என்று...நம்ம பாங்க் தலைவருக்குக் காங்கிரசு என்றாலே, உயிர்...அவ்வளவு தேசபக்தி...கதர் போட்டவங்களை கண்ட போதும், உபசாரம் செய்வார்...காங்கிரசுடைய வெற்றியிலே அவ்வளவு அக்கறை...பாங்க் வேலையைக்கூட ஒரு பத்து நாளைக்குக் கவனிக்கப்போறதில்லைன்னு சொல்லிவிட்டாரு...

கு:– அப்படியானா, நம்மகடன் இப்பக்கிடைக்காதுன்னு சொல்லுங்க...

ம:– அவசரம் அதிகமாக இருந்தா ஒண்ணு செய்யுங்க...ஒரு நாலுநாளைக்கு நாலு இடம் சுற்றிக் காங்கிர-