பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

சுக்கு ஓட்டு கேளுங்க...சேதி அவர்காதிலே விழுந்தாப் போதும், உடனே கடன் உங்க வீடுதேடி வந்து சேரும்...

கு:– உன்னோடு கூடவேவந்து வேலைசெய்கிறேன் மண்டலம்! எனக்கு சோடப்பட்டி, சொர்ணாபுரம், ஆளிப்பட்டி, அம்மானூர் இங்கே எல்லாம் சொந்தக்காரர்கள் நிறைய...

ம:– கேள்விதான் எனக்கும். ஆனா அங்கே உங்க பங்காளி ஒருத்தர் இருக்கிறாராம், அவர் எதிர்த்து வேலை செய்கிறாராம்...

கு:– என் பங்காளியா! விட்டுத்தள்ளு மண்டலம்! அவனுக்குச் செல்வாக்கா, எனக்குச் செல்வாக்கா என்பதை ஒருகை பார்த்துவிட்டாப்போகுது...

ம:– உன்பங்காளி முரட்டுப்பிடிவாதம்போல இருக்குது. கைக்காசைச் செலவழித்துக்கொண்டு வேலை பார்க்கறானாமே...

கு:– பணம் என்ன அவன்கிட்டத்தான் இருக்குதாமா! மற்றவங்களெல்லாம் என்ன பக்கிரியாமா! பார்த்துவிடுவமே அதையுந்தான். அந்த நாலு ஊரைப்பற்றின கவலையைவிடு, நான் பார்த்துக் கொள்கிறேன்...கடன்மட்டும்...

ம:– தேர்தலிலே நம்ம பக்கம் வெற்றி என்கிற செய்தி வந்த எட்டாம் நாள். கடன்தொகை வீடுதேடி வராவிட்டா, என்னை மண்டலம்னு கூப்பிடவேண்டாம், கமண்டலம்னு கூப்பிடு. வேலையைக் கவனி...புறப்படு...

மண்டலம்:– நமஸ்காரம்! நமஸ்காரம்! சௌக்கியந்தானுங்களே...பட்டாபிஷேக உற்சவத்திலே பார்த்தது...

தர்மகர்த்தா தாமோதரம்:– ஓ! மண்டலமா! பகவானோட கடாட்சத்திலே சௌக்கியந்தாம்பா...பத்துநாளா இலேசா பல்வலி.