பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

படித்தவர்கள் சிறுபான்மையினர் — மற்றவர்களே பெரும்பான்மையினர் — பெரும்பான்மையினர் ஆட்சி நடத்தும் உரிமை பெறுவதே ஜனநாயகம் என்று வாதாடியவர்களே உண்டு! அவர்களைக் காணும் நிலை எனக்கு ஏற்பட்டதுண்டு.

மதம், இனம், மொழி என்பவை காரணமாக, சிறு பான்மையினர் இருப்பது தெரியுமல்லவா! — அந்தப் பட்டியலில்தான் மண்டலம் சேர்த்து விடுவார், நான் காட்டிய பட்டியலையும்! அதனால்தான், ‘ஆனால்’ என்று பெருமூச்செறிந்தேன்.

இன்று நாடு உள்ள நிலைமையில் பட்டதாரிகள் சிறுபான்மையினர் — எண்ணிக்கைப்படி. அதிலும் நான் காட்டிய விஞ்ஞானத்துறைக் கற்றறிவாளர்கள் மிகச் சிறிய சிறுபான்மையினர். எனவே அவர்கள், செல்வாக்கற்ற நிலையில் வைக்கப்பட்டு விடுகின்றனர்—பொதுமக்களால் அல்ல—பொதுமக்கள் பெயரைக் கூறிக்கொண்டு ஆட்சி பீடம் பிடித்துக்கொள்பவர்களால். ஒருநாள் வந்தே தீரும்—படித்தவர்கள் பெரும்பான்மையினர் என்று நாடு பெருமையுடன் கூறிக் கொள்ளக்கூடிய நாள். இப்போது நல்ல வளர்ச்சி உள்ள நாடுகளில் அதுதான் நிலை. அந்த நிலைநோக்கி நம் நாடும் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, இன்றைய சிறுபான்மையினர் நாளைய பெரும் பான்மையினர் ஆகப்போவது திண்ணம். என் மகன் B. A. என்று கூறிப் பெருமைப்படும் தகப்பனார், ஆத்திச்சூடியோடு தமது படிப்பை முடித்துக் கொண்டவராக இருக்கலாம்; ஆனால், அவருக்குத் தம் மகனை நன்றாகப் படிக்கவைக்க வேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது.

நல்லரசு, சிறுபான்மையினர் எண்ணிக்கையில், என்ற கணக்கு மட்டும் பார்த்து, அவர்களின் பேச்சைத் துச்சமென்று தள்ளிவிடக்கூடாது. சொல்லப்படுவதன் பொருள் பொருத்தம், ஏற்றம் கண்டறிந்து, கொள்வதா தள்ளுவதா என்று முடிவு செய்யவேண்டும்—இந்தி கூடாது என்று சொல்பவர்கள் சிறுபான்மையினர்—ஆகவே, அவர்கள் பேச்சிலே எவ்வளவு நியாயம் இருந்தாலும், ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பது நல்லாட்சி என்ற தனிச் சிறப்பைப் பெறமுடியாது.

அதுபோலவே, நாம் மிகச் சிலர் கூறி என்ன பயன்? ஆட்சியிலுள்ளோர் அதனை மதித்து ஏற்றுக் கொள்ளவா