பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கட்டுவதும், திரித்துக் கூறுவது நடந்தபடி இருக்கிறது, அன்று—1958-ல்—நான் இந்தியை ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டேன், சட்டசபை கமிட்டிச் கூட்டத்தில் என்று, ஒரே புகார்—வதந்தி — தப்புப் பிரச்சாரம்—பரபரப்பு.

எனக்குத் தம்பி! அதிலே ஒரு மகிழ்ச்சி—என்னைப் பற்றி ‘விஷமம்’ செய்யப்படுகிறதே என்பது குறித்து வரவேண்டிய எரிச்சல்கூட எழவில்லை; இந்திக்கு எத்தனை அளவு எதிர்ப்பு இருக்கிறது, அதனை எவராவது ஆதரிக்க முனைகிறார்கள் என்று கூறப்பட்டால், மக்கள் எத்தனை ஆத்திரம் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்தேன். பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தேன், கட்டிவிடப்பட்டதை உடைத்துப்போடக் கிடைத்தது வாய்ப்பு.

“கூட்டத்திற்குத் தாங்களும் சென்று விட்டு அங்குக் கூறப்பட்ட கருத்துக்களையும் ஒத்துக் கொண்டுவிட்டு, கையெழுத்தும் போட்டுவிட்டு வெளியே வந்து வேறுவிதமாகச் சொல்கிறார்கள்.”

என்று பேசினார் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்;

“அதிலே கையெழுத்துப் போடப்பட்டது என்று சொல்வது தவறு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”

என்று நான் குறுக்கிட்டுக் கூறினேன்.

“அந்தக் கூட்டத்திற்கு யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் என்று தெரிந்து கொள்வதற்காகக் கையெழுத்து வாங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.”

என்று மேலும் கூறினார் அந்தக் காங்கிரஸ் உறுப்பினர்.

“அவ்விதமும் கையெழுத்து வாங்கவில்லை என்பதை அம்மையார் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

என்று நான் கூறினேன்.

1958, பிப்ரவரி 12ம் நாள் சென்னை சட்டமன்றத்தில் இந்த நிகழ்ச்சி; அதுவரையில், விடாமல் ஒரு திங்கள் மேடைக்கு மேடை, அண்ணாதுரை இந்தியை ஏற்றுக்-