________________
20 “This House is of firm opinion that Part 17 of the Constitution of India should be suitably amended so as to retain English as the official language of the Union Government without any time limit." காலவரையின்றி இந்தியப் பேரரசில், ஆங்கி லத்தை ஆட்சி மொழியாக நீடிக்கச் செய்வதற்கு ஏற்ற முறையில், இந்திய அரசியல் சட்டத்தின் 17 வது பிரிவைத் திருத்த வேண்டுமென்று இந்த மன்றம் உறுதியான கருத்து கொண்டிருக்கிறது. என்ற தீர்மானத்தைக் கழகம் கொடுத்தது. இதற்கு ஆதரவாக 14 வாக்குகள்; எதிர்த்து 121. கழகம் கொடுத் தது தோற்கடிக்கப்பட்டது; ஆனால் நாடு பதிவு செய்து கொண்டது, கழகம் மொழிபற்றிக் கொண்டுள்ள கொள்கை என்ன என்ற உண்மையை. அதே சட்டமன்றத்தில் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் நாள், "This House recommends to the Government to convey to the Union Government that this House is of opinion that steps should be taken to recognize all the fourteen languages enumerated in the 8th schedule of the constitution as the official languages of the Union under article 343 and till such time English shall be retained for all official purposes of the Indian Union." இந்திய அரசியல் சட்டத்தில் எட்டாம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள 14-தேசிய மொழிகள் எல்லாம் பேரரசின் ஆட்சி மொழிகளாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும், அதுவரையில் 343-ம் விதிமுறையின்படி, இந்தியப் பேரரசின் அதிகாரக் காரியங்கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தைப் பயன் படுத்துவது நீடிக்கப்படவேண்டும் என்பதனை மத்திய சர்க்காருக்குத் தெரிவிக்க வேண்டுமென்று. (மாநில) சர்க்காருக்கு இந்த மன்றம் சிபாரிசு செய் கிறது.