பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 ஆனால், கருத்து அடிப்படையில் காணப்படும் 'சிறு பான்மை' அவ்விதமல்ல, வேகமாக என்பது வளர்ந்து, பெருமபான்மை ஆகிவிடக்கூடியது. மாறி பெரும்பான்மையோர், கூடித் தீர்ப்பளித்துத்தான் கிரேக்கப் பெருமகனார் சாக்ரடீசுக்கு நஞ்சளித்துக் கொன்றனர்; அவருக்காக அந்த மன்றத்தில் சிறுபான்மை யோர்தான் பரிவுகாட்டினர். ஆனால், சாக்ரடீஸ் உயிரோடு இருந்தபோது இருந்த சிறுபான்மை, அவர் மறைந்ததும் வேகவேகமாக வளர்ந் தது, பெரும்பான்மையாகிவிட்டது! பெரும்பான்மையா! கிரேக்கம் முழுவதும் அவர் சார்பில்! கிரேக்கத்தோடும் நின்று விடவில்லை, அறிவுலகம் அவ்வளவும் அவருக்கே!! இவை குறித்தெல்லாம் எண்ணவும், இவைகளில் சிலவற்றைக் குறித்துப் பேசவும் இம்முறை டில்லியில் எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இந்தி எதிர்ப்பு உணர்ச்சியே சிறுபான்மையினரின் உணர்ச்சி என்பதுதானே டில்லிப் பேரரசின் கணக்கு. அந்த முறையில், 'சிறுபான்மை'யினரில் ஒருவன் என்ற நோக்கத்துடனேயே என்னை அங்குக் கவனிக்கிறார்கள். அந்நிலையில் சிறுபான்மையினர் பிரச்சினை பற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது, மகிழ்ச்சி தந்தது. டில்லிப் பல்கலைக் கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மாணவர் மன்றத்தில் பேசும் வாய்ப்புப் பெற்றேன். ஜனநாயகத்தில் சிறுபான் மையோர் பிரச்சினை என்பது குறித்துப் பேசினேன். கல்லூரித்தலைவர் சர்க்கார் என்பவரும், ஆசிரியர்களும் மாணவர்களும் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தில் பேசச் சென்ற என்னுடன் நமது மனோகரன், ராஜாராம், செழியன், முத்து, ராமபத்திரன் ஆகியோரும் வந்திருந் தனர். டில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி தரமானது என்று கூறப்படுகிறது. ஆனால், கல்லூரி முதல்வர், சென்னை கிருத்தவக் கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவை பற்றிப் பெருமிதத்துடன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். 4