________________
24 பிறகு, நானும் செல்லவேண்டியது முறைதான் என்று எண்ணிக்கொண்டேன். சிறுபான்மையோர் பிரச்சினை என்ற உடன், அனேக மாக, முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் ஆகியோர் குறித்த விஷயம் பேசுவேன் என்றுதான் அவர்கள் எதிர்பார்த் திருப்பார்கள்; நான் முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் ஆகியவர் குறித்த பிரச்சினையாக மட்டும் சிறுபான்மை யோர் பிரச்சினையைக் கருதவில்லை; கொள்கை கருத்து- இவற்றிலேகூட சிறுபான்மையினராக உள்ளவர்கள் பற்றிய பொதுப் பிரச்சினையாகவே அதனைக் கருதி னேன்; அந்த முறையிலேதான் பேசினேன். வாடிக்கையாக, கூட்டத் தலைவர் பேச்சாளர்பற்றி நாலு நல்லவார்த்தை சொல்லி அறிமுகப்படுத்துவார் அல்லவா; அதுபோல மாணவர் தலைவர் என்னைக் குறித்துப் பேசினார்-இவர் நமக்கெல்லாம் மிக நன்றாக அறிமுகமானவர்; பிரமுகர் ; தி. மு. கழகத்தவர் என் றல்லாம். நான் துவக்கத்திலேயே சொன்னேன். "என்னை இங்கு அனைவரும் மிக நன்றாக அறிந்திருப்ப தாக நண்பர் கூறினார்; நன்றி; ஆனால், உண்மை என்ன வென்றால், என்னைப்பற்றிய தவறான கருத்துகளைத் தான் நீங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள், நல்லனவ ற்றை அல்ல; என்றாலும், எனக்கொரு மகிழ்ச்சி, நல்லதோ கெட்டதோ, சரியோ தவறோ, ஏதோ ஒரு வகையில், என்னை நீங்கள் அறிந்துகொண்டிருக்கிறீர்கள்; அந்த மட்டில் மகிழ்ச்சிதான். இனி நான் பேசியான பிறகு, என்னை ஓரளவு நீங்கள் சரியாகவும் அறிந்துகொள்ள லாம், அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள வர்கள்; சரியாக அறிந்துகொள்ளும் இயல்பு உள்ள வர்கள்!' என்று கூறினேன். ஏன் அவ்விதம் கூறத் தோன்றிற்று என்றால், பல நூறு முறை என் பேச்சைக் கேட்ட பிறகும், இங்கே இல்லையா சிலர், என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள்; புரிந்துகொள்ள மறுப்பவர்கள், சுளையை விட்டுவிட்டுத் தோலை எடுத்துக் கொள்பவர்கள்! அதுபோல, எங்கும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள்; அதனால் அவ்விதம் கூறினேன். 'ஆனால் மாணவர்களிலே மிகப் பெரும்பாலானவர்கள் அவ்விதமானவர்கள் அல்ல என்பது, அவர்கள் பலமுறை, நான் கூறிய கருத்தினுக்கு ஒப்பம் அளிக்கும் முறையில்,