பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

29 இந்தியாவை ஒரு எல்லையாகக்கொண்டு கணக்குப் பார்க்கும்போது, முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் எனும் இரு பிரிவினருமே சிறுபான்மையினர்! ஆனால், முஸ்லீம்கள், கிருஸ்தவர்கள் உலகில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன் றாகக் கணக்குப்போட்டு, இந்துக்களுடன் ஒப்பிட்டால், முஸ்லீம்களும் கிருஸ்தவர்களும் பெரும்பான்மையினர் என்பது தெரிகிறது. உலகமெல்லாம் சுற்றுவானேன் தம்பி! அருகாமையி லேயே இருக்கிறதே விளக்கம்; சென்னை சட்டசபையை எடுத்துக்கொண்டு கணக்குப்பார்த்தால், கழகம் சிறு பான்மையாகிறது! சென்னை மாநகராட்சி மன்றத்தில் கணக்கெடுத்தால் காங்கிரஸ் சிறுபான்மையாகிவிடக் காண்கிறோம். இந்தி மொழி, பெரும்பான்மையினர் பேசும் மொழி என்ற வாதம்கூட, அதன் ஆதரவாளர் பயன்படுத்தும் அளவுகோலின் தன்மையைக்கொண்டுதான். இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளையும் ஒரு கணக்கில் சேர்த்து, இந்தியை மட்டும் ஒரு தனிக் கணக் காக்கினால், இந்தி இந்தியாவில் சிறுபான்மையினரின் மொழி என்பது விளங்கும். ஆனால் இந்தி ஆதரவாளர்கள், மராட்டிய மொழி பேசுவோரைவிட, தமிழ் பேசுவோரைவிட, தெலுங்கு பேசுவோரைவிட, வங்காள மொழி பேசுவோரைவிட, அதிக எண்ணிக்கையினர் பேசும் மொழி இந்தி, ஆகவே அது பெரும்பான்மையினரின் மொழி என்கிறார்கள், மொழியாக உண்மையில் பெரும்பான்மையினரின் இந்தி இருக்கிறது என்று மெய்ப்பிக்கவேண்டுமானால், இந்தியாவில் உள்ள 40-கோடி மக்களில் 30-கோடிப் பேர், அல்லது 25 கோடிப் பேர் இந்தி மொழியினர் என்று கணக்கு இருக்கவேண்டும். அப்படி இல்லை. ஆயினும் ஆட்சியினரின் அரவணைப்பு இருப்பதால், இந்தி பெரும் மொழி என்று அடித்துப் பேசு பான்மையினரின் கிறார்கள். தானே தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு கடைவீதி சென்று தின்பண்டம் வாங்கிக் கொடுத்து, தின்னத் தெரியாமல், தின்று சட்டையை அழுக்காக்கிக்கொண்ட