________________
30 சிறுபயல், அரும்பு மீசைக்காரனாகி, முதலாளி என்ற பட்டத்தை, தந்தை செத்ததால் பெற்றுவிட்ட பிறகு, தன்னையே - அறுபதாண்டு நிரம்பிய தன்னையே -பெய ரிட்டுக் கூப்பிட்டு மிரட்டுவதை, ஊழியம் செய்து பிழைக் கும் கந்தனும் முருகனும் சகித்துத் கொள்வதைக் காண் கிறோமே! அதுபோல, இப்போதும் கடன் வாங்கிக் காலந்தள்ள நினைக்கும் நிலையிலுள்ள இந்தி மொழி, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே இணையற்றது என்ற ஏற்றம் பெற்றுவிட்ட நமது தமிழ் மொழியைவிட உயர் நிலைபெற்று, ஆட்சி மொழி என்று ஆகிறது அல்லவா! சிறுபான்மை - பெரும்பான்மை என்பது, அதற்குக் கிடைத்திடும் பாதுகாவலனையும் பொருத்து வலிவு பெறு கிறது. ஆனால், எக்காரணம் கொண்டோ பெரும்பான்மை என்ற நிலையைப் பெற்றுவிட்ட ஒரு பகுதி, அதிகார பலம்கொண்டு, சிறுபான்மையைச்' சீரழிவாக நடத்தி வெற்றிகாண நினைப்பது, பேராபத்தில் நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். இந்தியே ஆட்சிமொழியாக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களிலேயே சிலர், ஆதிக்கம் காட்டி இந்தியைப் புகுத்திடப்போய், அதன் காரணமாக நாட்டிலே பிளவு மனப்பான்மை ஏற்பட்டு ஒற்றுமை குலைந்து போகும்போலத் தோன்றினால், இந்தி யை ஆட்சிமொழி ஆக்குவதை விட்டுவிடத்தான் வேண்டும் என்று பேசத் தலைப்பட்டுவிட்டுள்ளனர். மொழி காரணமாகப் புகுத்தப்படும் ஆதிக்கத்தையும், அதனை நாம் எதிர்த்து நிற்பதையும், நான் கல்லூரிக் கூட்டத்தில் எடுத்து விளக்கும்போதுதான், அவர்களின் இதழில் வெளியிட்டிருந்த கழகம் பற்றிய கருத்துபற்றி எடுத்துக்காட்டினேன், திராவிட முன்னேற்றக் கழகத் திற்கும் திராவிடர் கழகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை, இரண்டும் வேறு வேறு அமைப்புகளாகப் பதினேழு ஆண்டுகளாக உள்ளன என்பதனை உணர்ந்துகொள்ளா மலே இதழில் எழுதப்பட்டிருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டிவிட்டு, இப்போது திராவிடர் கழகம் இந்தியை எதிர்க்கத் தேவை இல்லை என்று கூறிடும் அமைப்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்பு நடத்திடும் அமைப்பாக இருப்பதனையும் விளக் கினேன். கூட்டம் முடிந்த பிறகு, பலர், நமது கழகம் .