________________
31 பற்றிய விளக்கம் பெற ஆங்கில இதழ் ஒன்று வெளியிட வேண்டுமென்றுகூட என்னிடம் கூறிச் சென்றனர், மதம், இனம், மொழி போன்ற காரணங்களால் ஏற் படும் சிறுபான்மையினர்-என்ற நிலையை ஆதிக்கத் திற்கும், கொடுமை செய்வதற்கும் வழியாக்கிக்கொள்ளா மல், அனைவரும் சமஉரிமை பெற்று வாழ்ந்திடத் தக்க அரசியல் முறையை வகுத்துக்கொண்டு, ஐந்நூறு ஆண்டு களுக்கு மேலாக, நிம்மதியாக வாழ்ந்துவரும் சுவிட்சர் லாந்து நாட்டு அரசியல் பண்பாடு பற்றியும், ஆங்கில மொழியினர், பிரஞ்சு மொழியினர் எனும் இரு பிரிவு மக்களையும் கொண்ட கனடா நாட்டில் இருமொழித் திட்டம் ஒரு சமரச ஏற்பாடாகப் புகுத்தப்பட்டது பற்றி யும், அந்த ஏற்பாட்டை நடத்திச் செல்வதில் நாணயக் குறைவு ஏற்பட்டதனால், இப்போது கனடாவில் கொந் தளிப்பு உள்ளது பற்றியும், கனடாவில் க்யூபெக் எனும் மாநிலம் பிரிந்துபோய்விட வேண்டுமென்ற கிளர்ச்சி மூண்டுள்ளதையும், க்யூபெக்கில் உள்ள பிரஞ்சு மொழி பேசுவோர் மனத்துக்குச் சமாதானம் ஏற்படுத்த, இது வரை பிரிட்டிஷ் அரசு சின்னம் பொறிக்கப்பட்டதாக இருந்த கனடா நாட்டுக் கொடியைக்கூட மாற்றி அமைத்து, பிரிட்டிஷ் சின்னம் ஆங்கில மொழி ஆதிக்கத் தைக் காட்டுகிறது என்று பிரஞ்சுக் கன்னடியர் கூறுவ தால், அந்தச் சின்னத்தை நீக்கிவிட்டு, புதிய கனடா தேசியக் கொடியில், பச்சிலையைச் சின்னமாக்கி இருப்ப தனையும் கூறினேன். என்ன கூறி என்ன பலன்? கடைசியாகக் கேட்கிறார் கள், எண்ணிக்கையின்படி தி.மு. கழகம் சிறுபான்மை தானே, தமிழகத்தில் என்பதாக. ஆம்! என்றேன். எத்தனை நாளைக்குத் தம்பி! இதனைக் கூறியபடி இருப்பது? சிறுபான்மையினர் அல்ல, நாங்கள் தான் தமிழகத்தில் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சி யினர் என்று கூறும் நிலையை எப்போது ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறாய், தம்பி! கனடாவில் ஒன்றரை நூற்றாண்டுக்கு மேலாக ஒரு பகுதியாக இணைந்து இருந்துவரும். க்யூபெக் மாநிலத்தில் அந்த மாநிலத்தில் மட்டும், பிரஞ்சுக் கன்னடிய உணர்ச்சி பெற்றவர்கள் அரசியலில் பெரும்பான்மையினராகி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காரணத்தால், கனடா முழுவதற்குமாக இருந்துவந்த தேசியக் கொடியையே, மாற்றிவிடும்