பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காஞ்சிக் கடிதம்: 12

தன்னை வெல்வான்
தரணியை வெல்வான்!



பாளையங்கோட்டைச் சிறையில் கருணாநிதி
பாதுகாப்புச் சட்டப்படி மாறனும் கைது
கருணாநிதிக்கோ தருமபுரித் தேர்தல் பற்றியே கவலை
விரிவாகி விட்டது இந்தி எதிர்ப்பு உணர்ச்சி
கருணாநிதிக்குக் கழகம் தரக்கூடிய மகிழ்ச்சிப் பொருள் தருமபுரி வெற்றியே!

தம்பி,

இலைகள் உதிர்ந்த நிலையில் சில மரங்கள்; இது முழுவதும் வெட்டவெளி அல்ல என்பதைக் காட்டுவதற்காக இருந்து கொண்டிருந்தன - மற்றபடி அந்த இடம் இயல்பாகவே வெப்பத்தை அதிகமாக்கிக் காட்டக்கூடிய இடம்.

முப்பது அறைகளுக்குமேல் இருக்கும் - அதிலே ஒரு அறையில் தம்பி கருணாநிதி - மற்ற அறைகள் எல்லாம் பூட்டிக் கிடந்தன. மொத்தத்தில் ஒருவிதமான வெறிச்சோடிய நிலை. ஆள் நடமாட்டம் இல்லை என்பது மட்டும் அல்ல; பேச்சுச் சத்தம்கூடக் காதிலே விழ முடி-

அ.க. 2—3