பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

இப்போது நமது கழகத் தோழர்கள் அடக்குமுறைத்தீயிலே தள்ளப்பட்டுக் கொடுமைகளால் தாக்கப்பட்டு வருவதைக் காணுமபோது என்னால், பீறிட்டுக் கொண்டு கிளம்பும் வேதனையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. உள்ளம் மேலும் உறுதிப்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

கொடுமைகள் இழைக்கப்படும்போது, அநீதி தலைவிரித்தாடும்போது, அக்கிரமம் தன் அகன்ற வாயினைத் திறந்து அகோரக் கூச்சலிடும்போது, எல்லாம் இறுதியில் நன்மைக்கே என்ற தத்துவத்தைத் துணைக்கழைத்துச் சமாதானம் தேடிக்கொள்ள முடியவில்லை. காரணம், நாம், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் என்ற முறையிலே மட்டும் இருந்து வருபவர்கள் அல்லர்; பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாகி விட்டிருக்கிறோம். அதனால் நம்மில் சிலருக்கு இழைக்கப்படும் கொடுமை நம் எல்லோருடைய உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்திவிடுகிறது.

ஆனால், நாம் இத்தகைய கொடுமைகளைத் தாங்கிக் கொண்டே தீரவேண்டும். உள்ள நிலை அது. இன்று இங்குள்ள காங்கிரஸ் அரசு, நாட்டிலே ஏற்பட்டுள்ள நிலையைக் காரணமாக்கிக் கொண்டு, கழகத்தை அழித்தொழிக்கத் திட்டமிட்டு விட்டிருக்கிறது. சுட்டுத்தள்ளவே கூசாத ஒரு ஆட்சி, சிறையில் தள்ளவும் வழக்குகளைத் தொடுக்கவுமா கூசும்! நல்லாட்சிக்குத் தேவையான எல்லா இலக்கணத்தையும் இழந்துவிட்ட நிலையில், கொடுமைகளன்றி வேறென்ன காணமுடியும்? காட்டுப் பன்றியிடமிருந்து உறுமலையும், ஓநாயிடம் இரத்த வெறியையும் தவிர, வேறெதைக் காணமுடியும்? ஆட்சி தவறான முறையை மேற்கொள்ளும்போது. நாட்டுக்கும் காட்டுக்கும் உள்ள வேறுபாடு மறைந்து விடுகிறது.

கவலை கப்பிய நிலையில் கருணாநிதியுடன் பல விஷயங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன் கருணாநிதியோ, இடையிடையே, தருமபுரித் தேர்தல் பற்றியே பேசிடக் கணடேன்; உடல் நலத்தைக் கவனித்துக்கொள், ஏதேனும் உடல் நலக்குறைவு இருப்பதாகத் தோன்றினாலும் உடனே மருத்துவர் தேவை என்பதைத் தெரியப்படுத்து என்று நான் கூறிக்கொண்டிருப்பேன், இடை மறித்து கருணாநிதி, தருமபுரித் தேர்தலில் காங்கிரஸ்