________________
38 ஏக்கம் கொண்டுள்ளவர்கள், தங்கள் வல்லமையினை, உழைப்பினை, வசதியினை, நேரத்தை, நினைப்பை, தருமபுரிக்காக என்று அனுப்பிக் கொடுத்திடின், வெற்றி பற்றிக் கவலை ஏது! வெற்றி நிச்சயம்! அந்தச் செய லினைச் செம்மையாகச் செய்வார்களா என்ற அய்யப் பாடு அல்ல, கருணாநிதிக்கு; அந்தச் செயலிலே தனது பங்கினைச் செலுத்த முடியா தபடி பக்தவத்சலனார் செய்துவிட்டாரே என்ற கவலைதான். அந்தக் கவலை வேண்டாம், தோழர்கள் திறமையாக, சுறுசுறுப்பாக, மெத்த ஆர்வத்துடன் தேர்தல் காரியத்தைக் கவனித்துக் கொள்கிறார்கள் என்று உறுதி அளித்தேன். அதிகாரிகள் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண் டனர்; அதன் பொருள் விளங்கிற்று; நான் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன்; நான் வெளிப்புற வாயிற்படி நோக்கி நடந்தேன்; தம்பி தனக்கென அரசு தந்துள்ள அறைநோக்கிச் செல்வதைப் பார்த்தபடி. சென்றேன், கண்டேன்; செய்தியை உங்களிடம் கூறி னேன்; ஆனால், இதுதானா நாம் ஒருவருக்கொருவர் தந்துகொள்ள வேண்டிய செய்தி? எவ்வளவு முறையாகச் செயலாற்றி வருகிறோம், கழகம் அமைத்து; நமக்கு இத்தகைய கொடுமைகளைக் காங்கிரஸ் அரசு செய்தபடி இருப்பதா! நாடு எத்தனை காலத்துக்குத் தாங்கிக் கொள்ளப் போகிறது இவ்விதமான கொடுமைகளை? எத்தனை எத்தனை கொடுமைகள் நடந்துவிட்டன இன்பத் தமிழகத்தில். மகனை இழந்த மாதாக்கள் கதறு கின்றனரே! எங்கெங்குச் சென்றாலும், நடைபெற்ற துப்பாக்கிச் சூடுபற்றியும், துடிதுடித்து மக்கள் செத்தது பற்றியும், ஊரெல்லாம் சுடுகாடுகள் போலாகிக் கிடப்பது பற்றியும், நண்பர்கள் கூறிடக் கேட்டுக்கேட்டு வேதனை மேலும் வளருகிறது. எத்தனை எத்தனை வழக்குகள்! எத்தனை விதமான கொடுமைகள்! நள்ளிரவிலே கைது கள்! பிடிப்பட்டவர்கள் நையப்புடைக்கப் படும் இழி தன்மை! ஏன் நமக்கு இழைக்கப்படுகின்றன இவ்வளவு கொடுமைகள்? நிகழ்ச்சிகள் நடைபெற்று நாட்கள் பலப் பல ஓடியபின், ஒரு திங்களுக்குப் பிறகும் கழகத் தோழர் கள் வேட்டையாடப்படுகின்றனர்; வழக்குகள் தொடுக்கப் படுகின்றன. நெல்லைக்குச் சென்று அங்கிருந்து மாயவரம், பிறகு ஆத்தூர், ராசிபுரம், பிறகு சேலம், தருமபுரி ஆகிய டங்கள் சென்று வந்தேன். வழிநெடுக இதே செய்தி,