பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 ஊரெங்கும் இதே கொடுமை. சித்திரவதையைவிட, ஒரே அடியாகக் கொன்றுபோட்டு விடுவதுமேல் என்பார்கள்; அதுபோல இப்படிக் கழகத் தோழர்களைக் கண்டகண்ட இடங்களில் விதவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கு வதைவிட, ஒரே அடியாகக் கழகத்தைத் தடைசெய்து விடலாமே, ஏன் இத்தனை பழிவாங்கும் உணர்ச்சி- வெறித்தனம், புரியவில்லையே, என்று கழக நண்பர்கள் கேட்கின்றனர். காரணம் இருக்கிறது காட்டுமுறையை நாட்டினை ஆள்வோர் கட்டவிழ்த்துவிட்டிருப்பதற்கு. காங்கிரஸ் ஆட்சிக்குப் பலத்த எதிர்ப்பு மூண்டு விட்டிருக்கிறது, சமூகத்தின் பல முனைகளிலுமிருந்து. இங்கேயே உள்ள நிலை என்ன? முன்பு கழகம் கிளர்ச்சி நடத்தியபோது, காங்கிரஸ் அமைச்சர்கள் கெம்பீரக் குரலில் முழக்கிவந்தனர், கழகத்தின் கிளர்ச்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை; மாணவர்கள், வழக்கறிஞர்கள். இதழ் நடாத்துவோர், அறிவாலயம் நடத்துவோர் ஆகியோரின் ஆதரவு இல்லை; ஓரு சமூகத்தின் மதிப்புமிக்க முனைகள் இவை; இந்த முனைகளில் கழகத்தின் பேச்சுக்கோ செயலுக்கோ துளியும் ஆதரவு இல்லை; எனவே, கழகத் தின் கிளர்ச்சிக்கு அரசினர் மதிப்பளிக்கத் தேவையில்லை; அது தன்னாலே மங்கி மடிந்துவிடும் என்று மார்தட்டி வந்தனர். இப்போது? எந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சி யினைக் கழகம் பல ஆண்டுகளாக நாட்டிலே எடுத்துக் காட்டிக்கொண்டு வந்ததோ, எந்த இந்தி எதிர்ப்புக்காகக் கழகம் அறநெறிக் கிளர்ச்சியில் ஈடுபட்டு இன்னல்களை யும் இழப்புகளையும் ஏற்றுக் கொண்டுவந்ததோ, அந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சி. மாணவர் உலகினில் பொங் கிடக் கண்டனர் ஆட்சியினர். வழக்கறிஞர்கள் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு ஆதரவு தந்திடுவது கண்டனர்; இதழ்கள், இனியும் ஏதும் நடைபெறாததுபோல் இருப் பது கூடாது என்ற உணர்வுடன் இந்தி எதிர்ப்புணர்ச்சி யின் வேகத்தையும் வடிவத்தையும் அரசினர் அறிந்து கொள்ளச் செய்யும் அரும்பணியினை ஆர்வத்துடனும் திறமையுடனும் நிறைவேற்றி வருவதனைக் காண் கின்றனர்; காண்பதனால் கிளர்ச்சிக்கு மதிப்பளிக்க முடியாது என்று கூறிவந்த போக்கு சுக்கல் நூறாகி விட்டது. மாணவர்களுமா! ஆசிரியர்களுமா! வழக்கறிஞர் களுமா! இதழ் நடாத்துவோருமா!! என்று கேட்டுக்கேட்டு அரசினர் அதிர்ச்சித் அடைந்து விட்டனர். இப்போது