பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

இப்படி அஞ்சி அஞ்சிச் சாவார்பற்றிப் பாரதியார் அழகாகப் பாடுகிறார்:

அஞ்சி அஞ்சிச் சாவார்—இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே!

என்றார். கழக ஏட்டிலே வரும் ஒவ்வொரு எழுத்தும்’ கவிதையும், படமும் கண்டு அஞ்சி அஞ்சிச் சாகின்றார். யார்? எம்மை வீழ்த்தவல்லாரும் உளரோ! நாடே எமது பக்கம் திரண்டு நிற்கிறது! எமது வீரதீர பராக்கிரமம் எப்படிப்பட்டது! வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தையே கிடுகிடுக்க வைத்தவர்கள் நாங்கள்! பிரிட்டிஷ் சிங்கத்தை அதனுடைய குகைக்குள்ளேயே நுழைந்து அதன் பிடரியைப் பிடித்தாட்டியவர்கள்! நாங்களா இந்தக் கழகப் ‘பொடியன்’களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் பயப்படுவோம்? சிற்றெறும்பைக் கண்டு சிங்கம் அஞ்சுமோ! எலிக்கூட்டம் கண்டு புலி கிலி கொள்ளுமோ!! என்றெல்லாம் பேசிவந்தவர்கள் இன்று என்ன ஆனார்கள்? கழகப் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலையினராகி, சட்டத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, அதிலும் பாதுகாப்புச் சட்டத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, காப்பாற்று! காப்பாற்று! என்று கதறி நிற்கின்றார்கள். அச்சம் விடுக! அலறலை நிறுத்துக! இதோ உமது பக்கம் யாம் நிற்கிறோம்,—என்று அபயம் அளித்துக் கொண்டு, நிற்கிறது அடக்குமுறை! அதன் துணையுடன் துரைத்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், எமது காங்கிரஸ் அரசு, அன்பு வழியை, அகிம்சை வழியை, காந்தியின் சாந்தி வழியைக் கடைப்பிடிக்கும் என்று கூறி வந்தவர்கள்.

உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!! என்று கூறிவந்தவர்கள்... பாடி வந்தவர்கள்—இன்று கழகத்தின் அச்சகங்களிலிருந்து வெளிவரும் எழுத்துக்களைக் கண்டு, கிலிகொண்டு, பாதுகாப்புச் சட்டத்தின் துணையைத் தேடிக்கொண்டு ஓடுகிறார்கள்.

எங்கே போனார்கள், ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட, ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள்? இம்மென்றால் இருநூறு ஏசலைக் கக்கக்கூடிய பேச்சாளர்கள்! அவர்களிடம் இருந்த ‘சரக்கு’ தீர்ந்துபோய்விட்-