பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

கருணாநிதி எழுதினால் என்ன? அதை மறுத்து இவர்கள் எழுதுவதுதானே! மக்கள் இருசாராரின் எழுத்தையும் பார்த்து எது நியாயமோ அதனைக் கொள்ளட்டுமே.

எழுதியும் பார்த்தார்கள், காங்கிரசிலே உள்ள எழுத்தாளர்கள்.......

மக்கள் சீந்தவில்லை போலிருக்கிறது!!

இப்படியும் இதுபோல வேறுபலவும் பேசிக்கொள்வார்களே! இது ஆட்சியில் உள்ளவர்களின் புகழினையோ வளர்த்துவிடும்!! ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பார்கள். அதன் விளைவோ இந்த அடக்குமுறை!!

இவைபற்றி எண்ணிடும்போது, சிறையில் தம்பி அடைக்கப்பட்டிருப்பது குறித்து இயற்கையாக எழும் சோகம்கூட மறைகிறது; கருணாநிதியின் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஆட்சியாளர் எத்துணை அஞ்சுகிறார்கள் என்ற நினைப்பு எழுகிறது; ஒரு வெற்றிப் புன்னகை தன்னாலே மலருகிறது.

கழகத்தின் வளர்ச்சி கண்டு காங்கிரஸ் அரசு கதிகலங்கிப் போயுள்ளதை எடுத்துக் காட்டி, கழகத்தாழர்களுக்கு மேலும் எழுச்சியைத் தரவல்ல நிகழ்ச்சி, கருணாநிதியைச் சிறைப்படுத்தி இருப்பது என்பது புரியும் போது மகிழ்ச்சிகொள்ளக்கூட முடிகிறது,

கழக வளர்ச்சியை அரசினர் கண்டு கலங்கிடும். வண்ணம் பேச்சாலும் எழுத்தாலும் பணியாற்றியதற்காக கழகம் என்ன விதத்தில் நன்றியைத் தனது கருணாநிதிக்குத் தெரிவித்துக்கொள்வது?

ஒன்று இருக்கிறது. கற்கோட்டையில் அடைக்கப் பட்டுள்ள கருணாநிதிக்குக் கழகத் தோழர்கள் காட்டக் கூடிய நன்றியறிவிப்பு ! தருமபுரித் தேர்தலில் கழகம் வெற்றி பெறவேண்டும் அந்தச் செய்தி செந்தேனாகி எத்தனை கொடுமை நினறந்த தனிமைச் சிறையினையும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாக்கிடும். அந்த வெற்றிச் செய்தி, காடு மலை வனம்வனாந்திரங்களைக் கடந்து, காவல்கட்டு யாவற்றினையும் மீறி கருணாநிதியின் செவி சென்று மகிழ்ச்சி அளித்திடும். அப்போது