பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

பெற்று வெளியிடத் தொடங்கி இருக்கிறோம். பல காரணங்களால் இவைகளை நூலாக வெளியிடுவதிலும் நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இனித் தடையின்றி இவை விரைவில் வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பொழுது வெளியிடப் பெறும் இந்தத் தொகுதி மொத்த வரிசையில் பதினான்காம் தொகுதியாகும். காஞ்சியில் வெளிவந்த கடிதங்களில் இரண்டாம் தொகுதியாகும், இதில் பதினோரு கடிதங்கள் வெளிவந்துள்ளன. ‘காஞ்சிக் கடிதங்கள்-2’ என்று தலைப்பிட்டுப் புதிய எண்கள் கொடுத்திருக்கிறோம்.

காஞ்சியில் வந்த கடிதங்களையும். வழக்கம் போலப் புலவர் நா. அறிவழகன் அவர்கள் உள் தலைப்பிட்டுக் கொடுத்தும், கிடைக்காத கடிதங்களுக்கு ‘ஜெராக்ஸ்’ பிரதி எடுத்துக் கொடுத்தும் பலவாறு உதவினார்கள். டாக்டர் சாலை இளந்திரையன் அவர்கள் பிரதியை நன்கு ஒப்பு நோக்கி அச்சிட்டு உதவினார்கள். இவ்விரு அறிஞர்களுக்கும், காஞ்சியில் வெளிவந்த கடிதங்களை நூல்வடிவில் வெளியிட எங்களுக்கு வாய்ப்பளித்த திருமதி ராணி அண்ணாதுரை அவர்களுக்கும், அழகாக அச்சிட்டு உதவிய சாலை அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி உரியது.

வழக்கம் போலத் தமிழ்ப் பெருமக்கள் இந்நூல் வரிசையினையும் ஏற்று எங்களை ஊக்குவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

—பாரி நிலையத்தார்