28
கலந்த குரலில், புல்கானினாலும் குருஷேவாலும் மக்களிடம் பேச முடிகிறது.
இரும்புத் திரையிட்டுள்ளனர் என்று பிறநாட்டார், குறிப்பாக வல்லரசுகள் பேசிய காலையில், கொல்லன் உலைக்கூடத்து வெப்பம் போல, ரஷியாவின் புதுமுறை உருவாகிக் கொண்டிருந்தது என்று கூறலாம். இன்று வடித்தெடுத்த வாளைக் காண வாரீர், என்று புல்கானின் அழைக்கிறார்—வந்திடின் காண இன்னின்ன காட்சிகள் உள்ளன என்று குருஷேவ் பட்டியல் தருகிறார். எவரும் வரலாம், எம்மை மதிப்போரும் வரலாம், எமது முறையினைக் குறித்து மட்டமான கருத்துக் கொண்டோரும் வரலாம் என்று அழைக்கிறார்கள் ரஷியத் தலைவர்கள்.
நமது நாட்டு விவசாய மந்திரி பக்தவத்சலத்தைக் கூட அழைத்தார்களாம்.
பிறநாடுகளிலிருந்து இதுவரை வந்திருந்த தலைவர்கள் யாருக்கும் தரப்படாதவகையில் மக்கள், இவர்கட்கு வரவேற்பு அளித்தனர் என்பது மட்டுமல்ல, பிற எந்தத் தலைவரும், மக்களிடம் காட்டாத வகையில் அன்பையும் அக்கரையையும் இவர்கள் காட்டினர்.
இன்னிசை கேட்டு இன்புறுதல்
நாட்டியம் கண்டு மகிழ்தல்
குல்லாயணிந்து குதூகலப்படுவது
குங்குமப்பொட்டு வைத்துக்கொண்டு கும்பிடுவது
இளநீர் பருகுவது
நமஸ்தே கூறுவது!
இவைகளெல்லாம், பொதுவான முறைகள்—இங்கு வரவேற்கப்படும் யாருக்கும் ஏற்பாடாகும் உபசார முறையாகும்.
ஆனால் மக்களின் முகத்திலே ஓர் மலர்ச்சி, திருவிழாக் கோலம், தோழமை உணர்ச்சி—இவைகளை யார் தீட்ட முடியும், ஊட்ட முடியும் !
அது போன்றே, மக்களின் சார்பிலேயே எந்தக் காட்சியானாலும், சம்பவமானாலும், பொருளானாலும், பேச்சானாலும், ரஷியத் தலைவர்கள் கண்டனர், பேசினர், இங்கு வந்தது மக்களைக் காணவும் மக்களிடம் பழகவும் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், அறியவும் — என்ற நோக்குடனேயே அந்தத் தலைவர்களின் போக்கு இருந்து வந்தது.
குதுப்மினாரையும், தாஜ்மஹாலையும் ஜும்மா மசூதியையும் அமெரிக்க நாட்டுத் தலைவர்களோ பிரிட்டிஷ் பிரபுக்களோ