30
பெரம்பூரில் கட்டப்பட்டுள்ள தொழிற்சாலையில், குருஷேவ், மக்களின் தலைவன், எதைக் கண்டறிய வேண்டும், கண்டறிந்ததை எங்ஙனம் கூறிடல் வேண்டும், என்பதை விளக்கிய முறையில் பேசிய பான்மை ஆச்சர்யகரமானது.
உமது முயற்சி பாராட்டத் தக்கது என்று கூறுவதற்கு அனுமதியளிக்கும்படி தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் மனமுவந்து சம்மதம் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் கூற விரும்புகிறேன் — என்று இவ்வண்ணம் சொல்லரண் கட்டி, கருத்தை மறைத்திடும் போக்கிலே தான் பிறநாட்டுத் தலைவர்கள் பேசுவர், பூசுவர் ! குருஷேவ் அவ்விதமல்ல ; “எம் பொருட்டு இந்தத் தொழிற்சாலையை அமைத்திருப்பதாகக் கூறுகிறார்கள் — குருஷேவ் அவர்களே ! தயவு செய்து அதனைப் பார்வையிட்டு, அதிலே குற்றம் குறையிருப்பின் எடுத்துக் கூறுக!” என்று மக்கள் கேட்டுக் கொண்டு, அனுப்பி வைத்திருப்பது போலவே, குருஷேவ், பெரம்பூர் தொழிற்சாலையைப் பார்த்துவிட்டு, சிறிதளவு கோபமாகவே,
செச்சே! ஏன் இப்படி கட்டிட வேலைக்கு எஃகு உபயோகித்தீர்கள்—
இது வீண் நஷ்டம் ! பாழ்படுத்தி விட்டீர்கள்.
இங்கு உபயோகித்திருக்கும் எஃகிலே முக்கால் வாசியை மிச்சப்படுத்தியிருக்கலாம்.
சிமிட்டியில் கட்டியிருக்கலாம்.
எஃகு பாழாக்கப் பட்டு விட்டது,
என்று கண்டித்து விட்டார். தொழிற்சாலை அதிகாரிகள் சமாதானம் கூற, சமர்த்துடன் முயற்சித்தனர். குருஷேவ் சம்மட்டியடி கொடுப்பது போல,
என்மீது கோபித்துக் கொள்ள வேண்டாம்.
உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்.
இது போல, எந் நாட்டிலேயும் சொல்லுகிறேன்.
எமது நாட்டில் இவ்விதம் எஃகு பாழாக்கப் படுவதில்லை.
வந்து பாருங்கள், எமது நாட்டினை என்று கூறினார்.
எவ்வளவு பிரமாண்டமான கட்டிடம்!
எத்துணை உற்சாகத்துடன் வேலை நடக்கிறது.
எல்லாம் என் ஆட்சியில், என் திட்டப்படி!—என்ற முறையில் தான் நேரு பண்டிதரே பெரம்பூர் தொழிற்சாலையைப் பார்த்தார், பூரித்துப் போனார், பாராட்டுரை வழங்கினார்; இங்கு எஃகு இவ்வளவு பாழாக்கப்படுகிறது என்பதை அவர்