பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

என்ன பதில் அளித்தான்? நிலைமையை உணர்ந்து, பரிசுப் பணம் கொடுத்துப் புலவரின் வறுமையைப் போக்கினான்.

போஜராஜன் காலத்தில் காமராஜர் இருந்திருந்து, போஜராஜனிடம் போய் நிற்காமல் அந்தப் புலவர் காமராஜரிடம் போய்க் கேட்டிருந்தால், பதில் என்ன கிடைத்திருக்கும்? கோபமா! உமக்கும் வருகிறது, உம் மனைவிக்கும் வருகிறது, உமது தாயாராகும் வருகிறதா! காரணமற்றுக் கோபம் வருகிறதா! சரி! சரி! அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்றா என்னைக் கேட்கிறீர்கள். சரி! சரி! கூறுகிறேன் கேள் ஐயா புலவரே! ஆறுவது சினம்!!— என்ற இந்தப் பதிலைத்தானே தந்திருப்பார்!!


9-10-66

அண்ணன்,
அண்ணாதுரை