பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி-2

இடம் : மாளிகை உட்புற மண்டபம்.

உறுப்பினர் : மாளிகைவாசிகளின் சிறுகூட்டம்.

ஒருவர் பேசுகிறார் : எவ்வளவோ கஷ்டப்பட்டு, மாளிகையை நம் வசப்படுத்திவிட்டோம். நமது மாளிகையோ, மிகப் பெரியது..... (ஒரு குரல், முழுவதும் கிடைக்காது போய்விட்டதே என்று கூவுகிறது).

பேசுபவர் : பரவாயில்லை ஒரு சிறு கொல்லை! போகட்டும். இந்த மாளிகையை நாம் பெற்ற பெருமையும் சந்தோஷமும்—எவ்வளவு தெரியுமா! இந்தச் சுபதினத்தைப் பாராட்டாதவர்கள் இல்லை.

(உள்ளே நுழைந்த சீமான்)

சீ : உலகமே பாராட்டுகிறது.

பேசு : நமஸ்தே! உட்காருங்கள்! இவர் போன்ற உத்தமர்களெல்லாம் நமக்கு உற்ற துணையாக இருப்பார்கள்.

(ஒரு குரல்: யார் இவர்? ஓடிப்போனவனின் ஒன்றுவிட்ட சகோதரன் போல இருக்கிறான்)

பேசு : இனி இம்மாதிரி பேசக்கூடாது. நமது மாளிகையை இனிச் சண்டை சச்சரவுக்குள்ளாக்கக்கூடாது. இவர்,...

சீ : மனிதன்; சர்வ தேசத்தான்–மாளிகையின் மகிழ்ச்சியைக் கண்டு மனமாரப் பாராட்ட வந்தவன். மாசற்ற மனமுடையவன்; காசூர் என்பது எமது தேசத்தின் பெயர்.

பேசு : காசூர்க் கண்ணியருக்கு எமது வணக்கம்.

சீ : மாளிகையில் மகிழ்ந்துள்ள உமக்கு எனது மகிழ்ச்சியுரை. எம்மாலான உதவியைச் செய்வேன். காசூரின் நோக்கம், மாசு துடைத்து, எங்கும் மகிழ்ச்சி வளரச் செய்வதுதான். உங்கள் மாளிகை, பிரம்மாண்டமானது–ஆனால் கவர்ச்சியில்லை – கவர்ச்சிகரமான-