பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பிறரை வீழ்த்தக் குழிபறிப்போன், வெட்டிய குழியில் தானே வீழ்வான்

என்று எங்கோ படித்ததாக நினைவு.

தம்பி அவர்கள் குழி வெட்டிக்கொண்டே இருக்கட்டும், நீயும் நானும் அதிலே தள்ளப்படுவதாக இருந்தாலும், அந்தக் கடைசி நிமிடம் வரையில் மக்களிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கொண்டிருப்போம். உண்மைக்கு வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பதைத்தான் பார்த்துவிடுவோமே.


4-9-66

அண்ணன்,
அண்ணாதுரை