21
கூற வேண்டியதற்கு வண்ணம் தேவையா, நல்வடிவம் தேவையா. நாடக வடிவினில் கொடுத்திடு, படிப்போர் உள்ளத்தைத் தொடும் என்று கூறுகிறது ஒரு குரல்!
கதை வடிவம் கொடு, எந்தக் கருத்தும் எளிதாகிடும், இனிப்பளித்திடும், இதயம் சென்று தாக்கிடும் என்று கூறுகிறது ஒரு குரல்!
ஒன்றல்ல இரண்டல்ல, பலப்பல உள, எனக்கு ஆவலூட்டுபவை,
ஆனால், நானோ கூறவேண்டியகளைக் கூற வேண்டிய முறையில் கூறியிருக்கிறோம் என்ற பெருமிதம் கொண்டிட முடியவில்லை; முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று மட்டுமே கூறிட முடிகிறது. ஆனால், அந்த நிலையே ஓர் தனித்தன்மை வாய்ந்த மகிழ்ச்சியினைத் தருகிறது. காரணம், வடிவம் வண்ணம் எந்தத் தரத்தில் உளது என்பதுபற்றி அதிகம் பொருட்படுத்தாமல், நமக்குத் தேவைப்படுவனவற்றினை, நம்முடைய தோழமையிலே மகிழ்ச்சி தந்திடும் அண்ணன் தருகின்றான் என்ற பற்றுடன், இதழினை வரவேற்றிடும் ஆயிரமாயிரம் தோழர்கள் உளர் என்பதுதான்.
‘காஞ்சி’ இரண்டாம் ஆண்டு மலரும் அதேவிதமான வரவேற்பினைப் பெற்றிடும் என்பதனை உணருகின்றேன்; மகிழ்ச்சி கொள்கின்றேன்.
இந்த மலரில் நெடுங்கதைகள் என்று சொல்லத்தக்க அமைப்புடன், இரண்டு கருத்தோவியங்களைத் தந்துள்ளேன்; இரும்பு முள்வேலி, வண்டிக்காரன் மகன், கழகத் தோழர்களின் நன்மதிப்பினைப் பெற்றுள்ள பலர் தந்துள்ள கவிதைகள், கதைகள், கட்டுரைகள் மலரில் இடம் பெற்றுள்ளன.
இவைகளிலே ஒன்றுகூட, படித்துப் பொழுது ஓட்ட அல்ல! ஒவ்வொன்றும் ஒரு பிரச்சினையை விளக்கிட! இந்தத் தனித்தன்மை இதழ்களை மட்டும் நடத்திடுவோர் கொண்டிடவோ, தந்திடவோ முடியாது; அவர்கட்கு அந்த முறை, தேவையுமில்லை.
எடுத்துக்காட்டுக்காக—எரிச்சல் மூட்டவேண்டும் என்பதற்காக அல்ல—ஒன்று கூறுகின்றேன்: இன்று காங்கிரசாட்சியின் போக்கையும், ஒவ்வொரு நடவடிக்கையையும்,