பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மெய்யம்மை இல்லம்

போகத்தான் போறேன், போகத்தான் போறேன்னு சொல்லிக்கொண்டே இருந்தாயே பொழுதுக்கும்; தலையே போறதானாலும் போகாம இருக்கப் போறதில்லே தீமிதிக்கற திருவிழாவுக்குன்னு; போகல்லியா, அமர்க்களமா நடக்குதாமே ஆட்சியூர் தடியெடுத்தான் கோயிலிலே; தீமிதிக்கிற திருவிழா.

போகணும்னு கொள்ளை ஆசைதான். தீமிதிக்கிற திருவிழாவோட வேடிக்கை பார்க்கமட்டுமில்ல, தீ மிதிக்கறதுக்கே ஆசைதான்...

தீ மிதிக்கிறதுக்கா? அடீ ஆத்தே! கால் புண்ணாயிடுமே கண்டவங்க தீ மிதிச்சா...!

மிதிக்கிறவங்க காலெல்லாம் என்ன தீஞ்சா போகுது...

அவங்க வேண்டுதலைச் செய்து கொண்டவங்க—விரதம் இருக்கிறவங்க— அவங்களைத் தீ ஒண்ணும் செய்துடாதாம்.

எனக்கு மட்டும் என்னவாம்? நானுந்தான், தீ மிதிக்கறதுன்னு தீர்மானிச்சி வைச்சிருக்கறேன்.

பயம் இல்லையா, உனக்கு?...... நெஜமாச் சொல்லு, தீயிலே இறங்கத் துணிவு இருக்குதா?

இருக்கறதாலேதான், சொல்றேன் தீ மிதிச்சே காட்டப்போறேன்னு...

தீர்மானம் செய்து கொண்டிருந்தாச் செய்யத்தான் வேணும்; செய்வதாச் சொல்லி விட்டுச் செய்யாமேப் போனாத்தான், ஏகப்பட்ட பாபமாம், எல்லம்மன் கோயில் பூசாரி ஏழெட்டு நாளைக்கு முன்னாலே சொன்னாரு.....

காலையிலே சொன்னாரா, மாலையிலே சொன்னாரா அந்தப் பேச்சு?

அதென்ன என்னமோ ஒரு தினுசாக் கேட்கறே, காலை வேளையிலா, மாலையிலான்னு ......?

காரணத்தோடுதான் கேட்கறேன். அவரோட பேச்சு பொழுதுவிடிஞ்சாப் போச்சி! புரியல்லையா! அட அவன்