33
ஆமாம். இப்பக்கூடத்தான், என்னோட எண்ணம் அது. நான் போகப் போறது இல்லே, தீ மிதிக்க...
தீமிதிக்கப் போகாதவ, எங்களை மட்டும் போகச் சொல்றயே, ஏன்னு, மெய்யம்மை கேட்கலியா?
கேட்கவிடுவேனா? தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போகப் பயமான்னு? கேட்டு ரோஷத்தை மூட்டிவிட்டேன். பாரேன், பிறகு மெய்யம்மை பட்டபாட்டை! போகத் தான் போறேன், ஆனா கொழந்தை ஒண்ணு இருக்கேன்னு இழுத்தா...
மெய்யம்மைக்கு எப்பவும் அந்தக் கொழந்தை கவனம் இருக்குமே; தெரியுமே—
ரொம்பக் கவலைப்பட்டா கொழந்தைக்கு, பங்காளிங்களாலே, எதாச்சும் கெடுதல் வந்துவிட்டா என்ன செய்யறதுன்னு பொலம்பினா.
பொலம்பி? போகப் போறதில்லே தீமிதிக்கன்னு சொல்லிவிட்டாளா...
சொல்லவிடுவேனா? கொழந்தையைப்பத்திப் பயப்பட வேணாம்; பார்த்துக்கொள்ள நான் இல்லையான்னு சொன்னேன். ஒப்புக்கொண்டா போக...
சாமர்த்தியக்காரி பவுனாம்பா நீ, மெய்யம்மை குடும்பத்தோடத்தானே கிளம்புவா...
ஆமாம்; இவமட்டும் போனா, மத்ததுக சும்மா இருக்குமா... கொழந்தை மட்டும்தான் வீட்டிலே...கொண்டாட்டந்தான் உங்க பாடு...
நம்ம பாடுன்னு சொல்லு பிரித்து வைத்துப் பேசாதே...
எனக்கும் எதாச்சும் தராமலா போவிங்க கிடைக்கறதிலே...கொழந்தையோட பேச்சை எடுத்தா, எவ்வளவு உருகிப்போறா தெரியுமா மெய்யம்மெ! அடே அப்பா! அது அரசாளப் பிறந்ததாம்!!
அரசு ஆளும், ஆளும்டி பவுனாம்பா, ஆளும். இவ கிளம்பட்டும் தீ மிதிக்க; அந்தக் கோட்டான் என்ன கதி
அ. க. 7—3