35
தீ மிதிக்கிறதுக்குத் துணிவு இல்லாத பயன்னு இனிப் பேச முடியாது அண்ணே! கருத்தப்பன் குடும்பத்தோட கிளம்பப் போறான் தீ என்னாதான் செய்துவிடும் பார்க்கலாம்னு கூறிக்கிட்டு...
பலே! பலே! அதைத்தானே நான் எதிர்பார்த்தப்படி இருந்தேன்! இந்தப்பய தீமிதிக்க வேண்டியதுதான், தீய்ந்து போகும் இவனோட திட்டம்... தெரியுமா......?
கோட்டையூர் அண்ணே! விவரமாச் சொல்லுங்க.
கோலெடுத்தான்! உனக்குத் தெரியுமேல்லோ, கருத்தப்பனோட திட்டம்...... நம்ம கோட்டையூர்லே அவனுடைய கொழந்தை இருக்கே, உதயசூரியன், அதுக்கு இடம்பிடிக்கற எண்ணம்.
ஆமாம்! உதயசூரியனுக்குக் கோட்டையூர்லே இடம் கிடைக்கும்னுதான் சொல்றான்.......
சொல்றானேல்லோ! இப்ப, இவன் தீமிதிக்கக் கிளம்பப் போறானேல்லோ, அதோட தீர்ந்துபோய் விடும் கோட்டையூர்லே இடம் பிடிக்கற திட்டம்......
ஏன்! தீ மிதிக்கறதிலே ஆசாமி தொலைஞ்சு போயிடுவான். அப்படி நினைக்கறியா?
அது அல்ல அப்பா! உனக்கு ஒரு இரகசியம் தெரியாது. நம்ம பெரியவரு இல்லே, தொலைதூரத்தான், அவருடைய பேச்சை மீறிக் கோட்டையூராகட்டும் வேட்டையூராகட்டும், நடக்க முடியுமா?
முடியாது! ராட்டையூர் ராஜா இல்லையா அவரு. அதனாலே!
அந்த தொலைதூரத்தான் என்ன உத்தரவு போட்டிருக்கிறாரு தெரியுமா, தீ மிதித்தவன், கோட்டையூர்ப் பாதையிலே நடக்கக்கூடாதுன்னு உத்திரவு.
தீ மிதிக்கப்போனா, கோட்டையூர் போகக் கூடாதா...
கோட்டையூர் பாதையிலேகூட நடக்கக்கூடாது. அதுதான் புது உத்தரவு.