36
அப்படியானா, தீமிதிச்சிவிட்டு, கருத்தப்பன் வீடு திரும்பியதும், கோட்டையூரை அடியோடு மறந்து விடணும்...
ஆமாம், ஆமாம்! உதயசூரியன் கோட்டையூர் போய் அரசாளப் போகிறான்னு பேசிக் கொள்வானேல்லோ கருத்தப்பன், அந்த எண்ணத்திலே மண் விழுந்துது...
ஊரார். பாவம், உதயசூரியனோட இவன் கோட்டையூர் போகப்போறான்னு பேசிக்கொள்கிறாங்க...
ஆமாம்......தீமிதித்தா கோட்டையூர் பாதையிலேயே நடக்கக் கூடாதே. புது உத்தரவு!
பாதையிலேயே நடக்கக்கூடாதுன்னா, கோட்டையூர் போய்க் கொலுவிருக்கிறது எப்படி......?
நடக்காதுங்கறேன். பவுனாம்பாளும் அவளொட புருஷன் வலைவிரித்தானும் திட்டமிட்டு, மெய்யம்மையைத் தூண்டிவிட்டாச்சி.
தீமிதிக்கக் கிளம்பறதுக்கா! ஒத்துக்கிட்டாங்களா......
ஒத்துக்கொள்ளாம இருப்பாங்களா! பவுனாம்பாதான் பச்சைச் சிரிப்பிலே கெட்டிக்காரியாச்சே! அடி ஆத்தே! நெருப்புன்னா பயமா உனக்கும் உங்க வீட்டுக்காரருக்கும்னு பேசி, மெய்யம்மைக்கு ரோஷமூட்டிவிட்டிருக்கறா......
சரியான ஆசாமிதான்! ஏன் தூண்டுறான்னு யோசிக்க ரோஷம் இடம் கொடுக்காது......
ஆமாம்... பவுனாம்பாளுக்கு இருக்கிற எண்ணம், தீமிதிக்க மெய்யம்மையோட குடும்பம் போய்விட்டா, குழந்தை இருக்குமேல்லோ வீட்டிலே, அதோட கழுத்திலே கையிலே உள்ளதைப் பார்த்துக்கொள்ளலாம் என்பதுதான்.
அடடே! அவளோட திட்டம் அதுவா! ஆக, தீமிதிக்கப் போனா, குழந்தை கோட்டையூர் போக முடியாது.....
ஆமாம்...ஆமாம்...எல்லாம் இவரோட ஏற்பாடு....தெரியுதா...... என்னமோ பெரிய திட்டம் போட்டானே கருத்தப்பன், இப்ப பார்த்தயா, அவனோட எண்ணத்திலே மண்விழுது......