பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

“ஆமாம்! பொது மக்களுடைய நல்லாதரவு காரணமாக....” என்று நான் விளக்கம் தந்தேன்.

“உங்களைப் பொதுமக்கள் துளியும் ஆதரிக்கவில்லை என்று கூறிக்கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு, இதனால் ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்பட்டுத்தானே இருக்கும்?”

“ஆமாம்! கொஞ்சநஞ்சமான எரிச்சல் அல்ல” என்று நான் கூறினேன்.

“அந்த எரிச்சல் காரணமாகத்தான், காங்கிரஸ் கட்சி உங்களைத் தூற்றுகிறது இல்லையா?” என்று கேட்டார்.

“சாதாரணமான தூற்றலா! பண்புள்ள யாரும் பேசக் கூசிடும் பேச்செல்லாம் பேசுகிறார்கள்; பெரிய இடத்தில் அமர்ந்திருப்பவர்கள்கூட!” என்று நான் கூறினேன்.

வருத்தப்படுகிறாயா! பைத்யமே! பைத்யமே! அவர்கள் தூற்றத் தூற்றத்தான், அதனை நீங்கள் தாங்கிக்கொள்ள தாங்கிக் கொள்ளத்தான், பொது மக்களுக்கு உங்களிடம் ஒரு பரிவு பற்று ஏற்பட்டிருக்கிறது. அதனையும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். ஆகவேதான் உங்களை எப்படியாவது தேர்தலிலே நிற்க ஒட்டாதபடி தடுத்துவிட முயன்றனர். சாதாரண முறைகள் போதவில்லை. ஜனநாயகத்தை நடத்துவதாக உலகத்துக்குச் சொல்லிவிட்டு, ஒரு கட்சியைத் தேர்தலுக்கு நிற்கவிடாதபடி, தடை உத்திரவு போடமுடியவில்லை. ஆகவே, நேர்வழி கூடாது என்று குறுக்கு வழி சென்று ஒரு சட்டம் உண்டாக்கிக் கொண்டனர். பிரிவினை கேட்பவர்கள் தேர்தலிலே ஈடுபடக் கூடாது என்ற சட்டம். ஆஹா! சட்டம் போட்டா எங்களை மட்டந்தட்டப் பார்க்கிறீர்கள் என்று நீங்கள் கூவிக் கொந்தளித்து, சட்டத்தை மீறுவீர்கள், உடனே தேர்தலில் நிற்கும் உரிமையை அழித்து விடலாம், போட்டி இருக்காது, போகபோக்கியம் தரும் பதவி என்றென்றும் இருக்கும் என்ற சூழ்ச்சி. அதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்கள், அதனால் ஜனநாயகம் பிழைத்தது. அதைத்தான் நான் கதையாகக் கூறினேன்! தீமிதிக்கிற திருவிழாவுக்கு, பவுனம்மாளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, மெய்யம்மை போயிருந்தால், அவள் குழந்தைக்கு என்ன கதி நேரிட்டிருக்கும்!” என்று விளக்கினார்.

“பெரியவரே! உம்மைப் போன்றவர்கள் உண்மையை உணர்ந்து ஊராருக்கு உரைப்பீர்கள் என்பதிலே எங்க-